Periyar University Latest News | பெரியார் பல்கலை முன்னான் பதிவாளர் கைது செய்ய உத்தரவு
Periyar University Latest News
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை கைது செய்ய தொழிலாளர் நீதிமன்றம் சற்று முன் உத்தரவிட்டுள்ளது. இவர் 2021ல் பதிவாளராக இருந்தவர், தற்போது அதே பல்கலைக்கழகத்தில் கணினி துறை தலைவராகவும் உள்ளார்.
Read Also: பெரியார் பல்கலை பதிவாளர் சிறையில் அடைப்பு
1998ஆம் ஆண்டு தெய்வக்கனி என்பவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பணியிலிருந்து நீக்கி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இவர் இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2013ஆம் ஆண்டு, சேலத்தில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2021ஆம் ஆண்டு, தெய்வக்கனியை பணியில் சேர்க்குமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. அப்போது பதிவாளராக இருந்த தங்கவேலு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறினார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். மேலும், இது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்துக்கொண்டது. இதுதவிர தங்கவேலு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றம் அவமதிப்பாக கருதி, தங்கவேலு கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
இதனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.