Salem Government College | சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் டிஸ்மிஸ்
Salem Government College
சேலத்தில் ஜூனியர் மாணவரை தாக்கி கைதான, அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்து முதல்வர் கலைச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் வின்சென்டில்
அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து வருகின்றனர். கல்லூரியில் திருமலைகிரியை சேர்ந்த விக்னேஷ் (18) என்பவர் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியின் நுழைவுவாயில் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
Read Also: பேராசிரியர்கள் மேல்அங்கி அணிந்து பணியாற்ற வேண்டும்
அப்போது அங்கு வந்த நான்கு மாணவர்கள், திடீரென விக்னேசை சைக்கிள் செயினால் சரமாரியாக தாக்கினார். படுகாயம் அடைந்த விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார். இதில் அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களுக்கு விக்கேஷ் மரியாதை கொடுக்காததால், தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட எம்ஏ படித்து வரும் அஜித் (22), கௌதமன் (22), தீனா (22) மற்றும் விக்னேஷ் (22) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைத்து செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க கல்லூரியின் கவுன்சில் கூட்டம், முதல்வர் கலைச்செல்வன் தலைமையில் நடந்தது. இதில் சம்மந்தப்பட்ட நான்கு மாணவா்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.