ராமசெட்டிப்பாளையம் பள்ளி மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
ராமசெட்டிப்பாளையம் பள்ளி
பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா ராமசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 18ம் தேதி பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கவுசல்யா தலைமை தாங்கினார்.
சந்திரசேகர் என்பவர் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள பள்ளி சீருடைக்கான டை, பேட்ஜ் மற்றும் பெல்ட் ஆகியவை என 250 மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
Read Also: ராமசெட்டிபாளையம் அரசு பள்ளி – பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
இதுதவிர, சித்தாபுதூர் செல்வநாயகி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் வேலுச்சாமி ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள டைரியை பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு பேருந்து நடத்துனர் சிவசண்முகம் ஒருங்கிணைத்தார்.
இந்த விழாவில், பேரூர் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீகலா, ஸ்பார்க் மணி, கல்வியாளர் ரங்கநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே இந்த பள்ளி தனியார் பள்ளி நிகராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |