ராமசெட்டிபாளையம் அரசு பள்ளி – பள்ளி மேலாண்மை குழு கூட்டம் | Ramachettipalayam School SMC Meeting
கோவை ராமசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை கூட்டம் மார்ச் 20, 2022 அன்று சிறப்பாக நடந்தது.
அனைத்து அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவை மறுசீரமைப்பு செய்ய பள்ளி கல்வித்துறை பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி பள்ளி தலைமையாசிரியர் கௌசல்யா அவர்கள் பள்ளி மேலாண்மை கூட்டத்தை பசவேஸ்வரா மஹாலில் நடத்தினார்.
ராமசெட்டிபாளையம் அரசு பள்ளி
கோவை மாநகராட்சி 89வது வார்டு கவுன்சிலர் முருகேசன், டெக் பம்ப்ஸ் கனகராஜ், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதாகர் மற்றும் 70க்கும் மேற்பட்ட பெற்றோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 220க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில், பல சிறப்பம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது என்றும், குறிப்பாக, பிரத்யேகமான தனி நூலகம், மாணவர்களுக்கான ஒரு உணவு கூடம், கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறை ஏற்படுத்த இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

பள்ளிகளுக்கு பல உதவிகள் செய்த டெக் பம்ப்ஸ் கனகராஜ், கூட்டத்தில் பேசும்போது, இந்த பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மேலும் பள்ளி வளர்ச்சியில் அனைவரும் சிறப்பாக பங்காற்றி, மாணவர்கள் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும், என்றார்.
கவுன்சிலர் முருகேசன் பேசும்போது, பள்ளியின் தேவைகளை அறிந்து, அதனை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும், பெற்றோர்கள் தரப்பில் மழலையர் பிரிவு இந்த பள்ளியில் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் முன்வைத்தனர். மேலும் பள்ளியின் கல்வி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்கள் கல்யாணி, மஞ்சுளா, ரோஸ்லின், செல்வராணி மற்றும் நாகராஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். மேலும், கூட்டத்தில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் 16 பேர் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.