Ragging news in Tamil | ராகிங் தடுக்க உயர் கல்வி நிறுவனங்கள் சிசிடிவி கட்டாயம்
Ragging news in Tamil
உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்த வேண்டும் என்று
யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.
Also Read: உயர் கல்வி என்றால் என்ன
எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் என்றும், ராகிங்குக்கு எதிராக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 2009ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி, ராகிங் செய்து சட்டப்படி குற்றமாகும். பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956ன்படி உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ராகிங் செய்யமாட்டேன் என்று மாணவர்களும் பெற்றோரும் அதன் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்,
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.