Puthiya Thalaimurai Veetuku Oru Vingyani | வீட்டுக்கு ஓரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் அனுமதி
Puthiya Thalaimurai Veetuku Oru Vingyani
புதிய தலைமுறை நடத்தும் வீட்டுக்கு ஓரு விஞ்ஞானி அறிவியல் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய தலைமுறை என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால், வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 நிகழ்ச்சியினை வழங்கியினை வழங்கி வருவதாகவும், மனிதகுலத்தின் நலனுக்காக புதுமையும், எளிமையும் இணைந்த புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்கும் புதிய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்தி கவுரவிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Also: குழந்தைகள் வளரிளம் பருவம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குகிற நாளைய விஞ்ஞானிகளையும் அவர்களது கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு அறிவிக்கின்ற உன்னத மேடை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023 நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் நடத்த இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களும் பங்கேற்க உரிய அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி நிகழ்ச்சியில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் பங்கு பெற தேவையான ஒத்துழைப்பினை தலைைம ஆசிரியர் வாயிலாக அளித்து உதவிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.