Pudukottai CEO | புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
Pudukottai CEO
பள்ளி கல்வி இணை இயக்குனரின் கடித்தத்தில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சே மணிவண்ணன் மருத்துவ விடுப்பு காரணமாக விடுப்பில் சென்றுள்ளார். அதன்படி தற்போது முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ர பாலமுரளி நியமிக்கப்படுகிறார்.
Read Also: விழா மேடையில் சரிந்த கல்வி அதிகாரிகள்
மேற்படி கூடுதல் பொறுப்பு ஏற்கும் அலுவலர், விடுப்பில் உள்ள அலுவலர் மீளப் பணியேற்கும் வரை உண்டியல்கள் ஏற்பளிப்பது உள்ளிட்ட நிதி அதிகாரத்துடன் முழுக் கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
பொறுப்பு ஏற்பு மற்றும் ஒப்படைப்பு அறிக்கைகளை உடனடியாக இவ்வலுவலகத்திற்கும் தொடர்புடைய இதர அலுவலகங்களுக்கும் அனுப்பு சார்ந்து அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.