Psychology Definition in Tamil | உளவியல் என்றால் என்ன
Psychology Definition in Tamil
உளவியல் என்பது ஆங்கில மொழியில் சைக்கலாஜி எனப்படும். இவ்வார்த்தையானது கிேரக்க மொழிச் சொற்களான சைக்கி என்னும் உயிரைக் குறிக்கும் சொல்லிலிருந்தும் லோகஸ் என்னும் அறிவியலைக் குறிக்கும் சொல்லிலிருந்தும் தோன்றியதாகும். உள்ளம் பற்றிய அறிவு என்பதால் உளவியல் என்றனர்.
உளவியலை மனவியல் என்றும் அழைப்பர். காரணம் மனிதனின் மனநிலை பற்றிய கல்வி என்பதால் இப்பிரிவினை மனவியல் என்றும் அழைப்பர். மனிதனின் நடத்தையை /அனுபவங்களை விவரிக்கும் அறிவியலே உளவியல் ஆகும். நடத்தை என்பது உளவியலில் விரிந்த பொருளினை உள்ளடக்கியது. உடலியக்கச் செயல்களான நடத்தல் நீந்துதல் போன்ற பல செயல்களும். உள்ளச் செயல்களான சிந்தித்தல், கற்பனை, பொருள் காணுதல் போன்ற பல செயல்களும், மனவெழுச்சி அனுபவங்களான கோபம், மகிழ்ச்சி போன்றவையும் உளவியலில் அடங்கும்.
Read Also: அனிதா நினைவு அரங்கம்
உற்று நோக்கி ஆராய்ந்து உளவியல் என்பது ஆன்மா/மனம் ஆராயும் இயல் ஆகும். மனிதனின் புறச்செயல்களை எவ்வாறு அகச்செயலுடன் தொடர்பு கொண்டுள்ளது என்றும் அண்மை நிகழ்வுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதையும் விளக்குவதே” உளவியல் ஆகும்.
உளவியல், உடலியல் மற்றும் தத்துவயியலுடன் நெருங்கிய தொடர்புடையது. என்பதே முதல் உளவியல் நுாலாகும்.இந்நுாலினை எழுதியவர் அரிஸ்டாட்டில். DA Arima என்பதன் பொருள் ஆன்மாவின் இயல்புகள் இதற்கு பிற்பாடு குளொகல் என்பவர்தான் எழுதிய நுாலுக்கு சைக்காலஜி என்று பெயர் சூட்டினார். அதில் மனிதனின் ஆன்மா சிந்தனை செயல் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக எழுதினார்.