அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023

Anitha Ninaivu Arangam | Anitha Memorial Hall | அனிதா நினைவு அரங்கம்

Anitha Ninaivu Arangam | Anitha Memorial Hall | அனிதா நினைவு அரங்கம்

Anitha Ninaivu Arangam

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலி தொழிலாளியின் மகள் அனிதா சிறுமியாக இருந்தபோதே அவரின் தயார் இறந்துவிட்டார். தமிழ்வழி கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில்,  ஒன்றிய அரசு மருத்துவ சேர்க்கையினை 12ஆம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும் என்ற அறிவிப்பினால் மரணமடைந்தார்.

ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த நீட் தேர்வு பயிற்சிகளை பெறுவது சாத்தியமில்லை என்பதயைும், 12ஆம் வகுப்பில் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துச சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களை பெற முடியும் என்பதை உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Read Also: ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1ம் நாள் மாய்த்துக்கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகக்கு உணர்த்தியது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்றவுடன் ஒய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழுவை அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமை செயலாளர் அவர்கள் தலைமையில் அமைந்த அரசு செயலாளர்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியது. பின்னர் அம்மசோதா திருப்பி அனுபப்பட்டது. மீண்டும் அந்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் வாயிலாக மாண்புமிகு குடியரசு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என தொடாந்து வலியுறுத்தி வருகிறோம்.

அரியலூர் மருத்துவ கல்லூரி வளாகம் 2022 ஜனவரி 12 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் இந்திய பிரதமர் அவர்கள் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த புதிய மருத்துவ கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனிற்காக இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வேளையில் நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிைர இழந்த அனிதா அவர்களின் நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 22 கோடி ரூபாய் செலவில், 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts