Primary School Term Exam Schedule |மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 28ம் தேதி முடிக்க உத்தரவு
Primary School Term Exam Schedule
பள்ளி கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு அரசு பொதுத்தேர்வுகள் தவிர்த்து மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மூன்று பருவம் மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு நடத்துவது குறித்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
அதன்படி எண்ணும் எழுத்தும், மூன்றாம் பருவத்தேர்வு 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 17.4.2023 முதல் 21.4.2023 வரையும், செயல்முறைகளின்படி 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் தங்களுடைய உள்ளூர் நிலைக்கு தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
Read Also: வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் கைது
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்டங்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர் நிலைக்கு தகுந்தவாறு தேர்வு நாட்களை ஏப்ரல் 10ஆம் தேதி தேதியிலிருந்து ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இம்மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணை செயல்பாடுகள், கல்விச்சார செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளி கடைசி நாளாக 28.4.2023 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.