Postgraduate Teacher Arrest under Pocso | முதுகலை ஆசிரியர் கைது
Postgraduate Teacher Arrest under Pocso
கடலூர் மாவட்ட விருத்தாசலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தை சோ்ந்தவர் சாமிதுரை மகன் வெள்ளையத்தேவன். இவர் ஒரு அரசு மேல்நிலை பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
Read Also: சின்னவேலம்பட்டி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
இந்த நிலையில் கடந்த 25ம் தேதி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.