Post Metric Scholarship Scheme in Tamil | போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
Post Metric Scholarship Scheme in Tamil
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முதலமைச்சர் அவர்களின் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையிலும் விளிம்பு நிலை மக்கள் தங்கள் பொருளாதாரத்தில் முன்னேற கல்வியே சிறந்த உறுதுணையாக இருக்கும் என்ற நோக்கத்துடனும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்.
அதில் ஒன்றிய அரசால் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும், மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும் தலையாக கடமையாகும்.
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டங்கள் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்தப்படும் திட்டங்களாகும். இத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் ஒன்றிய அரசின் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Read Also: புதுமை பெண் திட்டம்
2022-2023ஆம் ஆண்டு முதல் இத்திட்டங்களை செயல்படுத்த புதிய இணைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் உயர்கல்வி சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க 30.1.2023 அன்று கல்வி உதவித்தொகை இணையதளம் திறக்கப்பட்டு 28.2.2023 நாள் வரை சுமார் 10 லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள்
https://tnadtwscholarship.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆதார் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் விண்ணப்பித்து போஸ்ட் மெட்ாிக் கல்வி உதவித்தொகை திட்டங்களின் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முந்தைய ஆண்டுகளில் கல்வி தொகை பெற்று, தற்போது புதுப்பித்தல் இனங்களின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களும் கட்டாயம் இவ்விணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எதிர்வரும் காலங்களிலும், இத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மற்றும் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், கல்வி உதவித்தொகை திட்டங்களில் புதிய திட்டங்களை கொண்டு வர இந்த அரசு பாடுபடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.