You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Puthumai Pen Thittam | புதுமை பெண் திட்டம் | மூவலூர் இராமமிர்தம் திட்டம் என்னாச்சு?

Puthumai Pen Thittam

Puthumai Pen Thittam | புதுமை பெண் திட்டம் | மூவலூர் இராமமிர்தம் திட்டம் என்னாச்சு?

Puthumai Pen Thittam

தமிழக அரசு சமீபத்தில் மூவலூர் இராமமிர்தம் கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தியது. இதில் அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வியின்போது மாதம் ரூ. ஆயிரம் உதவித்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது மூவலூர் இராமமிர்தம் திட்டம், புதுமை பெண் திட்டம் என்று தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறையின் அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த திட்டத்திற்கு தகுதியான மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்காக தமிழக அரசு 698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் சுமார் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள். மாணவிகள் ஒவ்வொரு மாதம் செப்டம்பர் 7ம் தேதி ரூ.ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.

Read Also: Moovalur Ramamirtham Ammaiyar Scheme Full Details Here

புதுமை பெண் திட்டம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சோ்க்கைக்கான அதிகரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளில் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் கீழ் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு/பட்டயப்படிப்பு/ பட்டப்படிப்பு/தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரைக்கும், மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக பெறலாம்.

புதுமை பெண் திட்டம் நோக்கம்

  • பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்துதல்
  • குழந்தை திருமணத்தை தடுத்தல்
  • குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்
  • பெண் குழந்தைகளின் விருப்ப தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்
  • உயர் கல்வியினால் பெண்களின் திறமைமைய ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல்
  • உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்
  • பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்
  • இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்

புதுமை பெண் திட்டம் தகுதிகள்

  • மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ம் ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வராக இருக்க வேண்டும்.
  • தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்ற பின் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்
  • அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலப்பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
  • மாணவிகள் 8 (அ) 10 (அ),12ம் வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். (சான்றிதழ் Certificate course), பட்டயம் (Diploma/IT, D.Ted,,Courses) இளங்கலை பட்டம் (Bachelors’ Degree) (B.A, B.Sc, B.Com, BBA, BCA and All Arts and Science, Fine Arts Course) தொழில் சார்ந்த படிப்பு (B.E, B.Tech, MBBS, B.D.S, B,Sc (agri), B.V.Sc, B.Fsc, B.L etc) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy, etc போன்றவை)
  • தொலைத்தூர கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  • 2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்,
  • தொழிற்கல்வியை பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து  ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
  • 2021-2022ஆம் ஆண்டில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலை படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.
  • இத்திட்டத்தன் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன் அடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது.

Penkalvi Helpline Number

இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்த தங்களுக்கு தேவையான தெளிவுரைகள் / கூடுதல் விவரங்கள் கட்டணமில்லா தொைலபேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும் இளங்கலை / தொழிற்கல்வி / மருத்து கல்வியில் இரண்டாம் ஆண்டு முதல் 5 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காக புதியதாக உருவாக்கப்பட்ட https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பம் பெறப்படும்.