Post Graduate Teacher Counselling | முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு
Post Graduate Teacher Counselling
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் போட்டித் தேர்வு வாயிலாகவும் நிரபப்படுகின்றன. பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் ஆகியோருக்கு பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
Read Also: Teachers Transfer Counselling Vacancy List PDF
உரிய வழிகாட்டும் முறை
அந்த வகையில், முதுகலை பட்டதாாி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானோரின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளி கல்வி இணை இயக்குனர் (மேல்நிலை கல்வி உத்தரவிட்டுள்ளார்).
இதுதொடர்பாக, அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் 1.1.2023 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் ஆகியோரின் விவரங்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட வாரியாக தயார் செய்து பெயர் பட்டியல் மற்றும் கருத்துருக்கள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று கூறியுள்ளார்.