அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

Political Science Course in Tamil | அரசியல் அறிவியல் படிப்பு | பொலிட்டிக்கல் சயின்ஸ்

Political Science Course in Tamil | அரசியல் அறிவியல் படிப்பு | பொலிட்டிக்கல் சயின்ஸ்

Political Science Course in Tamil

இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி அரசியல் கட்சிகளுக்கும், வளர்ந்து வரும் அரசியல் கட்சிகளுக்கு வியூகம் வகுக்கும் நிறுவனங்கள் பின்புலமாக செயல்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக வியூக வல்லுநர்களை வைத்து, தேர்தல்களை சந்தித்து வருகின்றன. வியூக வல்லுநர்கள் தலைமையில் இயங்கும், வியூக வகுக்கும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை பெறுகின்றன. இத்தகையை நிறுவனங்களில் பணியாற்ற பி.ஏ அரசியல் அறிவியல் படித்தவர்களுக்க நல்ல வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

Read Also: Media Certificate Course in Tamil | ஊடகவியல் சான்றிதழ் படிப்பு

அரசு பணிகள், அரசியல் பணிகளை இலக்காக கொண்டவர்களுக்கு தெளிவான வழிகாட்டும் துைற. இந்திய அரசியல் மற்றும் சமூகம் குறித்து பயிற்றுவிக்கும் இந்த துறை, அவற்றை பற்றிய தெளிவான அறிவு மற்றும் சிந்தனை கொண்ட குடிமகள் உருவாக்கவல்லது.

விண்ணப்பம்

12ஆம் வகுப்பில் எந்தப்பாடப்பிரிவில் படித்தவர்களும் பி.ஏ அரசியல் அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பிக்கலாம். எம்ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் பி.ஏ, பி.எஸ்ஸி என்ற எந்த இளங்கலை படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு விண்ணப்பிக்காமல், மத்திய அரசு (ஐஏஎஸ் தேர்வுகள்) மற்றும் மாநில அரசிக் (டிஎன்பிஎஸ்சி) போட்டி தேர்வுகளை எழுதும் நோக்கம் உள்ள மாணவர்கள், சட்டப்படிப்பில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அரசியல் களங்களில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் விருப்பத்துடனும், திட்டத்துடனும் இதை தேர்வு செய்யும்போது , அதில் பிரகாசிக்கும் வாய்ப்பை பெறலாம்.

அரசியல் அறிவியல் படிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் ஆட்சியியல் துறையால் எம்ஏ மற்றும் எம்பில், பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. சென்னை ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் பெண்கள் கல்லூரியில் பி.ஏ பட்டமும், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் மற்றும் மாநில கல்லூரியில் பி.ஏ, எம்.ஏ, எம்பில் மற்றும் ஆராய்ச்சி பட்டங்களும் வழங்கப்படுகின்றன. இவை தவிர்த்து இந்தியாவில் பல மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழங்களிலும் பழமையான படிப்பு உள்ளது.

பெயருக்கு ஏற்றபடி, அரசியல் அறிவியல் துைறயின் இளங்கலை பட்டத்தில் இந்திய அரசியல், சா்வதேச அரசியல், இந்திய மற்றும் மேற்கத்திய அரசியல், சிந்தனைகள், இந்திய மற்றும் உலக அரசியலமைப்பு, சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள், ஜனநாயகம் போன்றவற்றை படிக்கலாம். முதுகலை பட்டத்தில் இவற்றையே இன்னும் ஆழமாக கற்றுக்கொள்ளலாம். சிவில் சர்வீஸ் தேர்வின்போது இந்த பாடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இளங்கலை பட்டம்பெற்ற பின், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளும், அரசாங்க பணிக்கான இதர ேபாட்டி தேர்வுகளுக்கும் தயாராகலாம். எல்எல்பி போன்ற சட்டப்படிப்புகளிலும் சேரலாம். முதுகலை பட்டம் பெற்றபின், கல்லூரி பேராசிரியர்களுக்கான தேசிய அளவிலான தகுதித்தேர்விலோ அல்லது மாநில அளவிலான தகுதி தேர்விலோ தேர்ச்சி பெற்று பணி வாய்ப்ைப பெறலாம். எம்பில், பி.எச்டி பட்டம் பெற்றவர்கள், பல்கலைக்கழங்களில் ஆசிாியராக பணியாற்றலாம்.

Related Articles

Latest Posts