You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Media Certificate Course in Tamil | ஊடகவியல் சான்றிதழ் படிப்பு

Typing exam apply Tamil 2023

Media Certificate Course in Tamil | ஊடகவியல் சான்றிதழ் படிப்பு

Media Certificate Course in Tamil

தமிழ்நாடு அரசு 26.11.2022 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியும் (தன்னாட்சி) இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டு செய்தியாளராக, எழுத்தாளராக, கருத்தாளராக தடம் பதிக்க விரும்பும் இளம் தலைமுறைக்குப் பெரும் வாய்ப்பாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஊடகத்துறையின் முன்னோடிகளால் மாணவர்கள் நேரடியாக பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

Read Also: டிஎன்பிஎஸ்சி செய்தியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ் இதழியல் உலகில் வளர்ந்து வரும் புதிய துறைகளில் ஆழ்ந்த அசலுடன் எழுத வல்ல இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்திருக்கிறது.

ஊடகவியலுக்கு தேவையான வலுவான அடிப்படை திறன்களை இந்த படிப்பு அளிக்கிறது. கோட்பாடுகளையும், களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது.

கட்டணமில்லா இந்த படிப்பில், வாரந்தோறும் பயிற்சி பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. திறன்மிக்க ஊடகவியலாளர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய ஊடக பிரிவை தேர்ந்தெடுக்க ஊக்கவிக்கப்படுகிறார்கள். பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் பண்பாடு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப்பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

எழுத்து, ஒளிப்படம், வீடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், திறன்பேசி, ட்ரோன், இதழியல் உள்பட பல்வேறு ஊடக பிாிவுகளில் தக்க துறைசார் நிபுணர்கள் வழியாக மாணவர்கள் திறன்களை பெறுவார்கள். கடந்த இரு நூற்றாண்டுகளாக தமிழ்ச் சமூகம் மக்களாட்சிக்கும் தற்சார்பு இதழியலுக்குமான சூழலை உருவாக்கி பேணி வளர்ப்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். முன்னோடி சமூகத்தின் மரபில் பன்முக இதழியல் கல்வி அனுபவத்துடன் ஊடக பணிகளுக்கு ஆயத்தமாவார்கள்.

பட்டப்படிப்பு தேறிய 20 முதல் 25 வயது கொண்ட யாரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகிறவர்கள் வாரம் ஐந்து நாள்கள் (திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை) சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகளுக்கு வர வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 5, 2022. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியல் சான்றிதழ் படிப்பபை பற்றி மேலும் அறிய

http://www.loyolacollege.edu/CAJ/home