You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

PM YASASVI Scholarship in Tamil | yet.nta.ac.in | பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம்

TRUST Exam Hall Ticket Download link 2023

PM YASASVI Scholarship in Tamil | yet.nta.ac.in | பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம்

PM YASASVI Scholarship in Tamil

மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ( PM YASASVI ) தகுதியான மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து, எழுத்து தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை ெபறலாம்.

நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சோ்ந்த முப்பதாயிரம் மாணவா்களுக்கு 2023-2024ஆம் நிதியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்து. தமிழகத்தை சார்ந்த 3,093 மாணவர்களுக்கு இந்த கல்வித்தொகை வழங்கப்பட உள்ளது.

Read Also: அகரம் கல்வி உதவித்தொகை திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் கல்வி தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு 2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

http://yet.nta.ac.in/frontend/web/schoollists/index என்ற இணையதளத்தில் பட்டியலிப்பட்டுள்ளது.

9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் PM YASASVI   நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் http://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அதை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு (OMR) அடிப்படையில் செப்டம்பர் 29ம் தேதி நடைெபறும்.

விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் மேற்கொடுக்கப்பட்ட இணையதளத்தில் காணலாம்.