அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023

Agaram Foundation Scholarship 2023 | அகரம் கல்வி உதவித்தொகை திட்டம்

Agaram Foundation Scholarship 2023 | அகரம் கல்வி உதவித்தொகை திட்டம்

Agaram Foundation Scholarship 2023

அகரம் பவுண்டேஷன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தகவல் தொழில்நுட்பம் உலகின் அத்தனை தகவல்களையும் அள்ளித் தந்தாலும் வாய்ப்புகளும், வழிகாட்டல்களும் தேவைப்படும் கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்கள் இன்றும் தங்களின் கல்லூரிப் படிப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் நகரங்களில் உள்ள பெருமைமிகு கல்லூரிகளில் பட்டப்படிப்பை பயில்வதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தருவதே அகரம் விதைத் திட்டம்.

2010-ல் தொடங்கப்பெற்ற விதைத் திட்டம் வாயிலாக கடந்த 13 ஆண்டுகளில் 4600-ம் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி கல்வி வாய்ப்பை பெற்றுள்ளார்கள். அகரம். 2023-2024 கல்வியாண்டில் கல்லூரியில் சேரவிருக்கிற மாணவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம். கடந்த 13 ஆண்டுகளில் பயன்பெற்ற மாணவர்களின் தரவுகளை தொகுக்கையில் உங்கள் பகுதிகள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எவரும் பயன்பெற்றிடாத நிலையை அறிந்து கொண்டோம் விதைத் திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள் இருக்கும் பகுதிகளில் 4 பள்ளிகளில் இருந்தே ஒவ்வொரு ஆண்டுக்கும்மான விண்ணப்பங்கள் கல்வி உதவி கேட்டு வருகின்றன / தேர்வு பெறுகின்றன. வாய்ப்புகள் பெற்றிடாத இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வரும் ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுத்து செயல்பட தொடங்கியிருக்கிறோம். அதனடிப்படையில் தங்களை தொடர்பு கொள்கிறோம்.

கிராமப்புற எளிய மனிதர்களுக்கான நம்பிக்கை அரசுப் பள்ளிகளும், ஆசிரியர்களுமே மாணவர்களை தினசரி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. ஆதலால், தங்கள் பள்ளியில் பகுதியில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவியர் மத்தியில் அகரம் விதைத் திட்டம் பற்றிய விவரங்களை எடுத்துக்கூறி உதவி தேவைப்படும் மாணவர்களை

 விண்ணப்பிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடவேண்டும் என்ற சிந்தனையின் செயலாக்கத்திற்காக சமூக மாற்றத்திற்கான தொடர் பணிகளில் தங்களோடு என்றும் இணைந்தே பயணிக்க விரும்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts