Plus Two Maths Exam Mark News | பிளஸ்2 கணித தேர்வுக்கு 5 மதிப்பெண்
Plus Two Maths Exam Mark News
கணித தேர்வில் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுத முயற்ச்சி செய்திருந்தால் 5 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏபரல் 3ம் தேதி நிறைவு பெற்றது. இதில் பிளஸ் 2 கணித பாடத்தேர்வு மார்ச் 27ம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வில் 5 மதிப்பெண் வினா பகுதியில் இடம்பெற்ற 47பி கேள்வி தவறானதாக இருந்தது. அதாவது பொருத்தமற்ற வகையில் ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவான பரப்பினை காண்க என்பது கேள்வியாகும்.
Read Also: TN PLUS 2 Mathematics Exam 2023
இதற்கு கருணை மதிப்பெண் தர வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு தேர்வுத்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. இதற்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பரவலான கண்டனங்கள் எழுந்தன. தமிழக அரசின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருணை மதப்பெண் வழங்குவதற்கு தேர்வுத்துறை தற்போது முன்வந்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விடைக்ககுறிப்பில் பிளஸ் 2 கணித பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற தவறான 47பி கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.