Plus Two Exam Latest News | பிளஸ் 2 தேர்வு இன்றுடன் நிறைவு | பிளஸ் 2 ரிசல்ட் தேதி
Plus Two Exam Latest News
பிளஸ்2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது, இதையடுத்து 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4,03,156 மாணவர்கள், 4,33,436 மாணவிகள் 3,185 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில், முதல் நாள் தேர்வான மொழிப்பாடம் (தமிழ்) தேர்வில் சுமார் 49 ஆயிரம் மாணவ, மாணவிகள், ஆங்கில பாடத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. இறுதி நாளான இன்று, வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன.
Read Also: பிளஸ் 2 கணித தேர்வு கருணை மதிப்பெண் வழங்க முடியாது
இதுவரை நடந்து முடிந்த பிளஸ்2 தேர்வுகளில் கணக்கு மற்றும் இயற்பியல் பாடத்தேர்வுகளில் கடினமாக கேள்விகள் இடம்பெற்றதால் மாணவர்கள் அந்த பாடத்தேர்வுகளில் சென்டம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கண்ட தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொரு நாளும், அந்த விடைத்தாள்கள் கட்டுகளாக கட்டப்பட்டு, அந்த மண்டலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அவை 7ம் தேதி அனுப்பி வைக்கப்படும். அதற்கு பிறகு 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். முதன்மை தேர்வர்களாக நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்கள் விடைத்தாட்கள் திருத்துவர். அதன்பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.
இதையடுத்து தமிழ்நாட்டில் 44 திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த உள்ளனர். இந்த பணி 24ம்தேதிக்குள் முடிக்கப்பட்டு, மே மாதம் 5ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.