PGTRB Provisional Selection List | Physics | History | Geography
PGTRB Provisional Selection List
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020-2021ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குனர் நிலை - I / கணினிப் பயிற்றுநர் -I நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை எண் 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 9.9.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 12.2.2022 முதல் 20.2.2022 வரை கணினி வழித்தேர்வுகள் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் 4.7.2022 அன்று வெளியிடப்பட்டது.
Also Read: PGTRB CV List 2022
பின்னர் பணிநாடுநர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 26.8.2022 முதல் 30.8.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள்/ ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணிநாடுநர்கள் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு 27.8.2022 அன்று இவ்வாாிய இணையதளத்தில் வெளியிடப்பட்ட 12 விகிதாசாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு 2.9.2022 முதல் 4.9.2022 ஆகிய நாட்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையிலும் இனசுழற்சி அடிப்படையில் ஏற்கனவே, Tamil, English, Mathematics , Physics, Computer Science, Botany, Zoology,
History, Economics, Commerce, Geography மற்றும் Physical Education ஆகிய 12 பாடங்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கான தற்காலிக தெரிவு பட்டியல்கள் ஆசியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
புதியது (17.09.2022)
- Chemistry
- Political Science and
- Home Science
PGTRB Provisional Selection List - Click Here
ஆகிய 3 பாடங்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கு தற்காலிக தெரிவு பட்டியல்கள் முதற்கட்டமாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உரிய விவரங்களை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்துகொள்ளுமாறு தெரிவிக்ப்படுகிறது.
அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.