மாணவிகளை நடனமாட சொல்லி, சில்மிஷம் செய்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர் கைது
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, காரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஈராசிரியர் பள்ளியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவம் நாளான நேற்று, நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த 42 வயதுள்ள ஆசிரியர் 11 மணியளவில் குடி போதையில் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ALSO READ THIS: மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நோக்கம்
அப்போது, அவர் மாணவிகளை நடனமாடுவதற்காக பள்ளி சீருடைக்கு பதிலாக, வேறு சீருடையை அணிந்துவருமாறு கூறியுள்ளார். மாணவிகள் வண்ண சீருடை அணிந்த பின், பள்ளிக்கு வந்தனர். அப்போது, அவர் தனது செல்போனில் பாட்டு ஒலிக்க செய்து, மாணவிகளை நடனம் ஆட கூறியுள்ளார். இதில் சில மாணவிகள் நடனம் ஆட மறுத்தனர். அப்போது, அவர் பள்ளி மாணவிகளை கிள்ளி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வகுப்பறையின் கதவு, ஜன்னல் உள்ளிட்டவை மூட முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது, மாணவிகள் சத்தம் போட்டுக்கொண்டே வகுப்பறையில் இருந்து வெளியே ஓடியுள்ளார்கள்.
இது சம்மந்தமாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்றபோது, ஆசிரியர் குடிபோதையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், மேலும் அவர்கள் அந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர். பெரம்பலூர் அனைத்து மகளிா் போலீசார் ஆசிரியர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவின்பேரில், வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர், மாணவிகளிடம் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.