You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

AIM Of The Safety and Security at School - மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நோக்கம்

AIM Of The Safety and Security at School - மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நோக்கம்|||

AIM Of The Safety and Security at School - மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நோக்கம்

AIM Of The Safety and Security at School

சமக்ரா சிக்‌ஷா எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி (மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மாநில கல்வித்துறையில் ஒரு அங்கமாக செயல்படும்) புதிய தொகுப்பு மூலமாக 2021 -22 கல்வியாண்டில் பள்ளி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு அதாவது ஆங்கிலத்தில் Safety and Security at School – Elementary and Secondary School என்ற செயல்பாடு அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்முறைகள் டிசம்பர் 10, 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு நோக்கம்

பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இதன் நோக்கம். இந்த செயல்பாடு மாநிலத்தில் உள்ள 31,214 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 6,177 அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது என செயல்முறைகள் தெரிவிக்கிறது. இதற்காக, பள்ளி ஒன்றுக்கு அரசு ரூ. 2 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு பணி

தூய்மை உறுதியை செய்யும் வகையில், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் விழிப்புணர்வு போஸ்டர்கள் மற்றும் மாணவர் மனசு என்ற பெயரில் பாதுகாப்பு பெட்டிகள் நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு என்றால் என்ன

இன்றைய சூழலில் மாணவ, மாணவியர் பாதுகாப்பு மற்றும் அவசியம் கருதி அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவா் பாதுகாப்பு ஆலோனை குழு உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் இரண்டு ஆசிரியர்கள், ஒரு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஒரு ஆசிரியரல்லாத பணியாளர், ஒரு நிர்வாக பணியாளர், ஒரு வெளி உறுப்பினர் (விருப்பத்தின்படி) ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.

குழு உறுப்பினர்கள் கூட்டம் மாதம் ஒரு முறை நடத்திட வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பின்னர் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் மனசு பாதுகாப்பு பெட்டி என்றால் என்ன?

Manavar Manasu Complaint box www.tneducationinfo.com
Manavar Manasu Complaint box www.tneducationinfo.com
ஒதுக்கப்பட்ட நிதி கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்காக பாதுகாப்பு பெட்டி பள்ளிகளில் வைக்கப்பட வேண்டும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியானது 14.5 – 12.7 அங்குலம் நீளம், அகலம், உயரம் அளவு கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக அந்த பெட்டியில் மாணவர் மனசு என குறிப்பிப்பட்டிருக்க வேண்டும். இந்த பெட்டி பள்ளி தலைமையாசிரியர் அறைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பார்க்கும்படி இடத்தில் மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிய உயரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த பெட்டி வைக்கப்பட்ட பிறகு, அது குறித்து விழிப்புணர்வை பள்ளி மாணவர்கள் இடையே ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் பள்ளிகள் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அதுகுறித்து கடிதத்தில் எழுதி, அந்த பெட்டியில் போட வேண்டும். 15 நாட்கள் ஒரு முறை பாதுகாப்பு பெட்டியை, மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன்னிலையில் திறந்து அதில் இருக்கும் புகார்களுக்கு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மாணவ, மாணவியர் பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர்கள்

School Student Awanrness Poster - 1 www.tneducationinfo.com
School Student Awareness Poster - 1 www.tneducationinfo.com
School Student Awanrness Poster - 2 www.tneducationinfo.com
School Student Awareness Poster - 2 www.tneducationinfo.com