பெண்கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க 18ம் தேதி வரை காலநீட்டிப்பு
கல்லூரி கல்வி இயக்குனர் அனைத்து மண்டல கல்லூரி கல்வி இயக்குநர்கள் அனுப்பிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது,
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதிபெற்ற மாணவியர்கள் விவரம் www.penkalvi.tn.gov.in என்ற உள்ளீடு செய்யவும் விடுபட்ட கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் மற்றும் மாணவர்கள் பதிவேற்றம் செய்யும் போது இதர குறைபாடுகள் ஏற்பட்டதின் விளைவுகள் சரி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் தெரிவிக்கப்பட்டு, தற்போது சரி செய்யப்பட்டு உரிய வழிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.
Read Also This: ரூ.1000 உதவித்தொகை முழு விவரம்
பெண் கல்வி உதவித்தொகை
மாணவிகள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வரும் 18.7.2022 அன்று இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கல்லூரிகளான அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் விவரங்களை உள்ளீடு செய்வது, அக்கல்லூரியின் அப்பாடப்பிரிவு சார்ந்த பொறுப்பாசிரியரும் மற்றும் முதல்வரும் பொறுப்பாவார்கள். ஏதேனும் மாணவியர்களின் விவரங்கள் விடுபட்டாலோ அல்லது உள்ளீடு செய்யாமல் இருந்தாலோ அவர்களே பொறுப்பாவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பணி முடித்த விவரத்தினை 18.7.2022 அன்று மாலை 4 மணிக்குள் இயக்குநருக்கு இவ்வலுவலக எம்-பிரிவு இணையதளமான dcemsection@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |