Read Also: BEO School Inspection Form PDF Download
இந்த அலுவலகங்களில் மற்றும் பள்ளிகளில் பணிநிரவல் /பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் பணியாளர்கள் 1.10.2022 முதல் பணியேற்று பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், கடந்த அக்டோபர் மற்றும் தற்போது நவம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, சங்கத்தினர் இந்த குறைபாட்டை நீக்கவும், ஊதியம் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) சந்தித்து மனு அளித்தனர். ஆனால், இதுதொடர்பாக இணை இயக்குனர் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, மாத தவணை, வீட்டு வாடகை, வங்கி கடன் உள்ளிட்டவை செலுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர். குறிப்பாக, பெரும்பாலான மாவட்டங்களில் முழுமையான ஊதியம் பெறப்படவில்லை எனவும், ஒரு சில மாவட்டங்களில் பகுதி அளவில் பணியாளர்கள் ஊதியம் அனுமதிக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து, பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் வரும் டிசம்பர் 5ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.