You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் வே.வசந்தி தேவி, செயலர் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
கொரோனா மூன்றாவது அலை காரணமாக தற்போது பள்ளி மூடப்பட்டுள்ளது, எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எந்த உறுதியும் இல்லை. இதனால் குழந்தைகள் இழப்பது கல்வியும், ஏற்கனவே பெற்றிருந்த கற்றல் திறனும். இதுதவிர, சத்துணவும், ஊட்டச்சத்தும் கூட. பள்ளிகள் மூடப்பட்டால் குழந்தைகள் பட்டினிதான்.
பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு வேறு வகைகளில் ஈடு செய்ய இயலாது. சென்ற முறை 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டபோது, முதல் சில மாதங்கள் வேறு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை. அதன் பிறகு, தமிழக அரசு உலர் உணவு, வாரம் ஒரு முறை வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தியது. பள்ளியில் அளிக்கப்படும் சூடான மதிய உணவுக்கு, வீடுகளுக்கு எடுத்து செல்லும் உலர் உணவு ஈடாகாது. பள்ளியில் கிடைக்கும் உணவில் ஒரு பங்குதான் மாணவருக்கு கிடைக்கும். பசித்திருக்கும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் பங்கிட்டுதான் மாணவர் சாப்பிட முடியும்.
சத்துணவு வழங்க வேண்டும்
காலை உணவும், அரசு பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்துள்ள நிலையில், மதிய உணவுக்கே இன்று ஆபத்து வந்திருக்கிறது. "இன்று மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படும் என்றும், பெற்றோர் பள்ளிக்கு வந்து முட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆணை அனுப்பப்பட்டிருக்கிறது."
அத்துடன் மற்றொரு அதிர்ச்சி செய்தியில்" பள்ளிகள் மட்டும் அல்ல, அங்கன்வாடிகளும் மூடப்படுகின்றன. குழந்தைகளுக்கான உலர் உணவு வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். " என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலே சுட்டிகாட்டியது போல், உலர் உணவு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும்போது, குடும்பம் முழுவதும் அதை பகிர்ந்து உண்ணும் நிலை ஏற்படும். குழந்தை அரைப்பட்டியில் இருக்கும். எங்கள் கோரிக்கையானது, எந்த காரணத்திற்காக பள்ளிகள் மூடப்பட்டாலும், மாணவர்களுக்கு சத்துணவு தொடர்ந்து அளிக்க வேண்டும். இது சட்டம் மூலம் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிடில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, நலிந்த ஒரு தலைமுறையை நாம் காண நேரிடும்.
பள்ளியில் சத்துணவு மையம் இயங்க வேண்டும், 20 பேர் கொண்ட ஒரு குழுவாக பிரித்து மாணவர்களை காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை பள்ளிக்கு வரவழைத்து கொரோனா விதிமுறை பின்பற்றி, உணவு வழங்க வேண்டும். இந்த பொறுப்பு தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.
கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்துக
கல்வி உரிமை சட்டம் 2009, பள்ளிகளின் நிர்வாகம், மேற்பார்வை பொறுப்புகளில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு பெரும் பங்களித்து வருகிறது. சட்டம் வலியுறுத்தும் இக்குழு தமிழ்நாட்டில் வெறும் பேப்பரில் முடமாகி கிடக்கிறது. இக்குழுவில் 75 சதவீதம் பெற்றோர்கள், இருவர் உள்ளாட்சி உறுப்பினர், குழு உறுப்பினரில் பாதி பேரும், குழு தலைவரும் பெண்கள். ஆனால், இக்குழுக்களை இயங்கவிடாமல் தலைமை ஆசிரியர்கள் செய்திருக்கின்றனர்.
தற்போது கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர், முயற்சியால், பள்ளி மேலாண்மை குழு புத்தாக்கம் பெற்று வருகின்றன. பள்ளி மூடியிருக்கும்போது, சத்துணவு அளிக்கும் பணியை இக்குழுவிற்கு வழங்கலாம். இதேபோன்று அங்கன்வாடிகளுக்கும் பத்து பத்துக் குழந்தைகளை அழைத்து மதிய உணவு வழங்கும் பொறுப்பு குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்களுக்கு வழங்கலாம். இதற்கு அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கம் முடிவு
இந்த கோரிக்கை தொடர்பாக, உங்களது கருத்துகளை கிழே உள்ளே கருத்து பதிவு பெட்டியில் மறக்காமல் தெரிவிக்கவும்.