Online admission for Adi Dravidar Hostels 2022 - ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர் சேர்க்கை
ஆதிதிராவிடர் நலம் | கல்வி விடுதிகள் | ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகள்| 2022-23 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை மற்றும் விதிமுறைகள்|
Online admission for Adi Dravidar Hostels 2022
ஆதிதிராவிடர் நல ஆணையரகம் சோ மதுமதி, 5.07.2022 அன்று, அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினா் நல அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசாணை நிலை 53 எண் படி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களை தேர்வு செய்வதில் சில நிர்வாக சிக்கல் ஏற்படுவதாலும், மேற்படி விடுதிகளில் பெயரளவில் போலியாக மாணவர்களின் சேர்க்கையினை முற்றிலுமாக தவிர்க்கும் வகையிலும், அதனை சரி செய்திடும் பொருட்டு விடுதி மேலாண்மை அமைப்பு
(Hostel Management System ) என்ற செயலின் மூலம் இணைய வழியில் மாணவர்களின் சேர்க்கை நடத்திட வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், மற்றும் நடைமுறையில் உள்ள மாணவர் சேர்க்கை விதிமுறைகளையும் பின்பற்றி http://tnadw.hms.in என்ற இணையதளத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.
Read Also This: பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?
விடுதிக்கான புதிய மாணவர் சேர்க்கை
- பள்ளி விடுதியில் சேர ஜூலை 5ம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
- கல்லூரி விடுதியில் சேர ஜூலை 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை புதுப்பிப்பு
- பள்ளி விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் ஜூலை 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை.
- கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் ஜூலை 5ம் தேதி முதல் 25ம் தேதி வரை.
மாணவர் சேர்க்கை விதிமுறைகள்
- ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிக்கான மாணவர் சேர்க்கை விவரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் நாளிதழ்களில் செய்தியாக வெளியிட வேண்டும்.
- புதியதாக இணைய வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க உதவிட வேண்டிய முழு பொறுப்பும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளை சார்ந்ததாகும்.
- இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ண்ப்பங்களை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களால் விடுதி வாரியாக பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
- பரிசீலனையின்போது, விடுதிகளில் ஏற்கனவே தங்கியுள்ள மாணவர்கள் நீங்கலாக உள்ள இடங்களுக்கு மட்டுமே புதிய மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
- விண்ணப்பங்களின் தகுதியுள்ள மாணவ, மாணவியர்களை தேர்வு செய்திடும் வகையில், மாவட்ட அளவிலான ஆலோசனைக குழுவினை (Advisory Committees for Selection of Students for Admission into Government of ADW hostels) கூட்டி மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
- மாணவர்கள் சேர்க்கைக்காக இணைய வழியில் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்படும் கால அளவு முற்றிலும் முடிவு அடைந்த பின்னர் ஏதேனும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் தவறும்பட்சத்தில், மாணவர்கள் தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்ப படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- அவ்வாறு நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் நேர்வில், அவர்களையும் விடுதியில் தங்கி பயில மேற்படி குழுவிடம் ஒப்புதல் பெற்று, அனுமதி ஆணை வழங்கிட வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இணையவழியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.