Office Assistant Job in Coimbatore | அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
Office Assistant Job in Coimbatore
கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் பொருட்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த காலிபணியிடமானது பகிரங்க போட்டியாளர் (பொது) முன்னுரிமையுடையோர் (General – Priority) என்ற இனசுழற்சியின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை பிரிவினர் மட்டுமே இப்பணி காலியிடத்திற்கு விண்ணபிக்க தகுதியுடையவர் ஆவார். முன்னுரிமை உடைய மனுதாரர்களில் அரசாணை நிலை எண் 122 மனித வள மேலாண்மை துறை நாள் 2.11.2021ன் கீழ் ஆணையிடப்பட்டவாறு, முன்னுரிமை வரிசை முறையை பின்பற்றி மட்டுமே பணிக்காலியிடம் நிரப்பப்படும்.
Read Also: டிஎன்பிஸ்சி தேர்வர்கள் கடும் அதிருப்தி
இந்த காலிபணியிடத்திற்கான கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி வயது. வயது வரம்பு 1.7.2022 அன்றைய தேதியின்படி, அனைத்து பிரிவினருக்கும் குறைந்தப்பட்ச வயது வரம்பு 18, அதிகபட்ச வயது வரம்பு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் ஆகியோருக்கு 34 வயதுக்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 37 வயதுக்கும் மற்றும் பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட நில முன்னுரிமை பிரிவினருக்கு மட்டுமே உச்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவம் Coimbatore.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 9.1.2023ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி, துைண இயக்குனர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜிஎன்மில்ஸ் அஞ்சல், கோவை 29.
கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.