NSS Social Work in Tamil | நாட்டு நலப்பணி திட்டம் பணிகள் என்ன
NSS Social Work in Tamil
நாட்டு நலப்பணித் திட்டத்தின் பணிகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
- அரசு தொடர்பான திட்ட பணிகள்
- நிறுவனங்கள் தொடர்புடைய திட்ட பணிகள்
- கிராமப்புற திட்ட பணிகள்
- நகர்புற திட்ட பணிகள்
அரசு தொடர்புடைய திட்ட பணிகள்
அரசு செயல்படுத்தி வரும் மருத்துவம், சுகாதாரம், கல்வி மற்றும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் திட்டங்களில் பங்கெடுத்து கொள்வது, குறிப்பாக மருத்துவத்துறையோடு இணைந்து போலியோ, எய்ட்ஸ், புற்றுநோய், கோவிட்- 19 போன்றவற்றிற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துவது. பொதுமக்கள் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் அது தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் அடங்கிய கலை வடிவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. சமுதாயத்தில் பொருளதார நிலையில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களும் கல்வி கற்பதற்கான அவசியத்தை குறிப்பிட்ட மக்களிடம் கொண்டு செல்வது. ஜனநாயகத்தை வலிமைப் படுத்தும் பொருட்டு தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் அனைத்து மக்களும் பங்கெடுக்கவும், 18 வயது நிரம்பியவர் அனைவரும் வாக்காளராகத் தம்மை பதிவு செய்து கொண்டு வாக்களிக்கும் உரிமையை பெறுவது தொடர்பான போன்றவை மாணவத் தொண்டர்களின் முக்கியமான பணிகள் ஆகும்.
Read Also: NSS Administration Structure in Tamil
நிறுவனங்கள் தொடர்புடைய திட்ட பணிகள்
மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் மரம் நடுதல், தூய்மை பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்து வளாகத்தின் சுற்றுப்புற சூழலை மேம்படுத்துதல், தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் போன்ற நிறுவனங்களோடு இணைந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல். மேலும் அரசு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளில் மாணவ தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்துக் கொள்வது நிறுவனங்கள் தொடர்புடைய பணிகளாக கருதப்படுகின்றன.
கிராமப்புற திட்ட பணிகள்
கிராமப்புற மக்களின் கல்விைய மேம்படுத்தும் திட்டங்களில் மாணவர்களை தங்களை இணைத்துகொள்ள வேண்டும். மேலும் அம்மக்களின் சுகாதாரத்தை பேணுவது தொடர்பான திட்டங்களிலும் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்தி அதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை அவா்களுக்கு வழங்க வேண்டும்.
நகர்புற திட்ட பணிகள்
நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் உள் மற்றும் வெளி நோயாளிகாக சிகிச்சை பெற்றுவருவோருக்குத் தேவையான உதவிகளை செய்தல். பொது மக்களுக்கு சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதோடு போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தைச் சரி செய்யும் பணிகளில் தம்மை ஈடுபடுத்து கொள்வது தொடர்பான திட்டங்களை வகுத்து மாணவர்கள் தொண்டர்கள் செயல்பட வேண்டும்.