No fee Nan Mudhalvan scheme | நான் முதல்வன் திட்டம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது
No fee Nan Mudhalvan scheme
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூல் செய்யக்கூடாது என்று உயர் கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் அனைத்து பல்கலைக்கழகத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தற்போது மாணவர்களின் திறமையை வெளிகொணரவும், வேலை வாய்பை உறுதிப்படுத்தவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டத்தின் திறன்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தனியார் முன்னணி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் இணைந்து 60 மணி நேரம் திறன் படிப்புகள் தற்போது கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.
Read Also: அரசு கலை கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறப்பு
இதற்கிடையில் சமீபத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், திறன் படிப்புகளுக்கு தேர்வு கட்டணம் மாணவர்களிடம் பெறலாம் என பரிந்துரையை முன்வைத்தனர். மேலும், இதுதொடர்பாக பல்கலைக்கழகம் உயர்கல்வியிடமும் விளக்கம் கேட்டது. இதையடுத்து, நான் முதல்வன் திறன் படிப்புக்கான முழு செலவை அரசே ஏற்கும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் எவ்வித கட்டணமும் மாணவர்களிடம் வசூல் செய்யக்கூடாது என்று உயர்கல்வித்துறை ஒரு தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.