பகுதிநேர ஆசிாியர்கள் பணி நிரந்தரம் குறித்து பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
குறைவான மாத சம்பளம், பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மற்றும் விலைவாசி உயர்வால் குடும்ப பொருளாதாரத்தை தாக்குப்பிடிக்க முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து அவா்களை பணி நிரந்தரம் செய்து வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த பல வருடங்களாக போராடி வருகின்றனர்.
பகுதிநேர ஆசிரியர்கள்
கடந்த ஆட்சி காலத்தில் வருட முறை ஊதிய உயர்வு என்பது இல்லை, பின்பு தொடர் போராட்டம் காரணமாக அதிமுக அரசு, அவர்களது மாத சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உறுதி செய்தது. பின்னர், கோரிக்கையின் பேரில், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தபின், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வார்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தது. இது ஆசிரியா்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியது.
Read Also This: பகுதிநேர ஆசிரியர்கள் பிப்ரவரி 24ல் போராட்டம்
பின் திமுக ஆட்சிக்கு வந்ததும், நிதி காரணம் காட்டி, திமுக தனது தேர்தல் வாக்குறுதியை தள்ளி போட்டிக்கொண்டிருந்தது. இதை அறிந்த பகுதிநேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கல்வி அமைச்சரிடம் பணி நிரந்தரம் கோரிக்கை வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் திமுக ஆட்சியிலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னையில் போராட்டங்களையும் நடத்தினர். இந்த பட்ஜெட்டிலாவது, பணி நிரந்தரம் அறிவிப்பு வரும் என அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், அதுசம்மந்தான எந்த அறிவிப்பு மானியக்கோரிக்கையில் இல்லாததால், பகுதி நேர ஆசிாியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர். பணி நிரந்தரம் ஒற்றை கோரிக்கையே ஒட்டுமொத்த குரலாக உள்ளது.