You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
NMMS Exam Latest News 2023 | என்எம்எம்ஸ் தேர்வு ஆதார் எண் இணைப்பு
NMMS Exam Latest News 2023
தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குனர் (நாட்டு நலப்பணிதிட்டம்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று, 2022-23 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும், மேலும், 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை (Renewal application) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யவோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10.01.2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது.
Read Also: National Talent Search Examination in Tamil
மேலும், பார்வை 1 இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு விவரத்தினை புதுடில்லி, மத்திய கல்வித் துறைக்கு உரிய காலத்திற்குள் அளித்திட மாணவர்களுக்கு உரிய தொகை வங்கிக் கணக்கில் சென்றடைய ஏதுவாக மாணவர்களது ஆதார் எண்களை வங்கிக் கணக்குடன் இணைத்திட பள்ளித் தலைமையாசிரியர் மூலம் மாணவர்களை அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.