அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.9 C
Tamil Nadu
Friday, September 30, 2022
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

National Talent Search Examination in Tamil| NMMS Exam|தேசிய திறனாய்வு தேர்வு

National Talent Search Examination in Tamil | NMMS Exam| தேசிய திறனாய்வு தேர்வு

தேசிய திறனாய்வு தேர்வு:

தமிழகத்தில் தேசிய திறனாய்வு தேர்வு அரசு தேர்வு இயக்ககம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். மேலும் இந்த பதிவில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் பணி உள்ளிட்டவை அறிந்துகொள்ளலாம்.

தேசிய திறனாய்வு தேர்வு நேரம் :

தேசிய திறனாய்வு தேர்வு நேரம்
தேசிய திறனாய்வு தேர்வு நேரம்

READ ALSO: ஊரக திறனாய்வு தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

தேசிய திறனாய்வு தேர்வு விதிமுறைகள்

காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை உள்ள Break Time -ல் தண்ணீர் குடிக்க சிற்றுண்டி (Snacks) சாப்பிட மற்றும் கழிப்பறை செல்ல மட்டும் தேர்வர்களை அனுமதிக்கப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்த வேண்டும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.

தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர் பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாட்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே, எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு மேல் ஒரு தேர்வறையில் அமர அனுமதி இல்லை.

OMR விடைத்தாள் பகுதி1 மற்றும் பகுதி 2 ஆகிய இரண்டு தேர்விற்கும் சேர்த்து ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் (OMR Sheet) பதிவெண்ணின் படி வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட OMR Answer Sheet அவர்களுடைய பதிவெண்ணிற்குரியவைதானா என்பதை உறுதி செய்து கொண்டு, மாணவர் மற்றும் அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.

05.02.2022 அன்று நடைபெறவுள்ள (NTSE) தேர்விற்கான SAT & MAT ஆகிய இரண்டு வினாத்தாள் கட்டுக்களையும் தேர்வு மையத்தில் காலை 7.45 மணிக்குள் சென்றடையும் வண்ணம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து சம்பந்தப்பட்ட தேர்வு மைய துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

துறை அலுவலர்கள் முதலில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சென்று வினாத்தாள் கட்டுகளை பெற்று காலை 7.45 மணிக்குள் தேர்வு மையத்திற்கு சென்றடைய அறிவுறுத்த வேண்டும்.

வினாத்தாளை பொறுத்த வரை பகுதி I மனத்திறன் (Mental Ability Test) தேர்விற்கான வினாத்தாட்கள் தேர்வு துவங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாக அதாவது காலை 8.45 மணிக்கும், பகுதி II படிப்பறிவுத் தேர்விற்கான (Scholastic Aptitude Test) வினாத்தாள் காலை 11.15 மணிக்கும் பிரிக்கப்பட்டு முறையே காலை 9.00 / 11.30 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலான காலத்தில் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது.

அனுமதிச்சீட்டு (Admission Card) உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர் பட்டியலில் பெயர் உள்ள தேர்வர்களை மட்டும் தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். புறச்சரக எண்ணில் (Out of Range Number) தேர்வெழுத கட்டாயமாக அனுமதி மறுக்கப்படுகிறது. புறச்சரக பதிவெண்ணில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டால் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடும்போது எழும் பின்விளைவுகளை முதன்மைக் கல்வி அலுவலர்களே எதிர்கொள்ள வேண்டும். எனவே தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்பொருட்டு புறச்சரக எண்ணில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தேர்விற்கு வருகைபுரிந்த தேர்வர்களின் OMR விடைத்தாளில் Present P என கருப்பு மையினால் நிழற்படுத்த வேண்டும். வருகைபுரியாத தேர்வர்களின் OMR விடைத்தாளில் Absent A என சிவப்பு மையினால் நிழற்படுத்த வேண்டும்.

நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, அதே நுழைவுச்சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படம் ஒட்டி அதில் தலைமையாசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும்.

தேர்வு நாளன்று வழங்கப்படும் OMR Sheetலும் புகைப்படம் மாறி / இல்லாமல் இருந்தால், அந்த OMR தாளிலேயே உரிய புகைப்படத்தினை (நுழைவுச்சீட்டுடன் ஒப்பிட்டு) பசையினால் ஒட்டி (Stapler அல்லது பின் போடக்கூடாது) தேர்வர்களுக்கு வழங்க வேண்டும் என முதன்மைக் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்க வேண்டும்.

பெயர்ப்பட்டியலில் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, இனம் (classification) ஆகியவற்றில் திருத்தம் ஏதேனும் இருப்பின் உரிய திருத்தம் செய்து சான்றொப்பமிட்டு, பெயர் பட்டியலின் இறுதியுள்ள Abstract-ஐ பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரின் கையொப்பம் பெற்று OMR விடைத்தாட்களுடன் தேர்வு நாளன்றே ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு முடிந்தவுடன் மாவட்ட கல்வி அலுவலர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள் / மீதமுள்ள வினாத்தாள் கட்டுக்களை பெற்று, முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்,முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மைய வாரியப் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபாா்த்து கொள்ள வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதனை உரிய பாதுகாப்பு வசதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

National Talent Search Examination in Tamil
National Talent Search Examination in Tamil

முதன்மைக் கண்காணிப்பாளர்கள் அறிவுரைகள்:

 • அனைத்து தேர்வு மையத்திலும் மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி துறைக்கு தெரிவித்து கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டும்.
 • 05.02.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய திறனாய்வு தேர்விற்கான (NTSE) SAT & MATஆகிய இரண்டு வினாத்தாள் கட்டுக்களையும் தங்கள் மைய துறை அலுவலரிடமிருந்து 7.45 மணிக்குள் பெற்று உரிய அலமாரியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
 • தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரும்போழுது Thermal Scannerகொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
 • தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரும் போது முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்க ஏதுவாக தேர்வு மையங்களில் முகக்கவசங்கள் வைத்திருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
 • கருப்பு மை கொண்ட பால்பாயின்ட் பேனாக்களை கையிருப்பில் வைத்திருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
 • மாணவர்கள் அருகருகில் இருப்பதை தவிர்க்க தேர்வு மையத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் அமைக்க வேண்டும்.
 • தேர்வு மையத்தில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், ஆசிரியர்கள், எழுத்தர் உள்ளிட்ட அனைத்து நிலைப் பணியாளர்களும் முக கவசம் அணிந்து தேர்வு பணியில் ஈடுபட வேண்டும்.
 • தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கும் நேரம் வரை, சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேர்வுக்கு தயாராவதற்கு ஏதுவாக முதன்மைக் கண்காணிப்பாளர் போதுமான எண்ணிக்கையில் காத்திருப்பு அறைகளை (Waiting Rooms) அமைக்க அறிவுறுத்த வேண்டும்.
 • தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு தேர்வு நடத்துதல் குறித்த அறிவுரைகளை 08.30 மணிக்கு வழங்க வேண்டும்.
 • தேர்வு அறை கண்காணிப்பாளர்களிடமிருந்து அலைப்பேசியின் பெற்று தேர்வு முடிந்த பிறகுதான் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
 • தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 8.40 மணிக்கு தேர்வறைக்கு அனுப்ப வேண்டும்.
 • தேர்வர்களை 8.45 மணிக்கு தேர்வறைக்குள் அனுமதித்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை சரிபார்த்து உரிய இருக்கையில் அமர வைக்க அறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்த வேண்டும்.
 • 8.45 மணிக்கு வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு 8.50-க்குள் வழங்கப்பட வேண்டும்.
 • 05.02.2022 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல்11.00 மணி வரைபகுதி I – MAT – Paper I மனத்திறன் தேர்வும் (Mental Ability Test), காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை Break Time-ம் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரைபகுதி II SAT PAPER II படிப்பறிவுத் தேர்வும் (Scholastic Aptitude Test) நடைபெறும்.
 • Mental Ability Test தேர்விற்கான வினாத்தாட்களை 8.55 மணிக்கு தேர்வறை கண்காணிப்பாளர்களால் பிரிக்கப்பட்டு 9.00 மணிக்கு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.
 • Mental Ability Test (Paper I) 11.00 மணிக்கு முடிந்தவுடன் OMR விடைத்தாட்களை தேர்வர்களிடமிருந்து பெற்று பாதுகாப்பாக வைத்து, Scholastic Attitude Test (Paper 1) தேர்வு தொடங்குவதற்கு முன்னர் OMR விடைத்தாட்களை அதே தேர்வருக்கு வழங்க வேண்டும்.
 • காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை உள்ள Break Time-ல் தண்ணீர் குடிக்க சிற்றுண்டி (Snacks) சாப்பிட மற்றும் கழிப்பறை செல்ல மட்டும் தேர்வர்களை அனுமதிக்குமாறு அறிவுறுத்த வேண்டும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.
 • தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 11.15 மணிக்கு தேர்வறைக்கு அனுப்ப வேண்டும்.
 • Scholastic Aptitude Test (Paper 1) தேர்விற்கான வினாத்தாட்களை 11.25 மணிக்கு தேர்வறை கண்காணிப்பாளர்களால் பிரிக்கப்பட்டு 11.30 மணிக்கு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.
 • தேர்வர்கள் தங்களுடன் கைக்கிருமி நாசினி (Hand Sanitizer) எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
 • தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் (Transparent Water Bottle) எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
 • கழிப்பறைகள் நன்றாக சுத்தம் செய்து கிருமி நாசனி தெளித்து சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டும்.
 • தேர்வு முடிவடைந்த பின்பு தேர்வர்களை போதிய இடைவெளியுடன் தேர்வு மையத்தை விட்டு அனுப்பி வைக்க அறிவுறுத்த வேண்டும்.
 • பெயர் பட்டியலில் திருத்தத்தினையும் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும். திருத்தம் அனைத்தும் சிவப்பு மையினால் மட்டுமே செய்யப்பட வேண்டும். மேலும் வருகைப்புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் OMR விடைத்தாட்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
 • அறைக் கண்காணிப்பாளர் தேர்வர்களின் பதிவெண் மற்றும் பெயர் ஆகிய கலங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் அவர் கையொப்பமிட வேண்டும் என்ற அறிவுரையை தவறாது பின்பற்றுமாறு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
 • தேர்வு முடிந்தவுடன் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கீழ்க்குறிப்பிட்ட படிவத்தினை பூர்த்தி செய்து Packet – III உடன் இணைத்தனுப்ப வேண்டும்.
தேசிய திறனாய்வு தேர்வு
தேசிய திறனாய்வு தேர்வு

தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் அறிவுரைகள்

 • தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 8.30 மணிக்கு தேர்வறைக்கு செல்ல வேண்டும்.
 • 05.02.2022 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல்11.00 மணி வரைபகுதி I – MAT – Paper ஐ மனத்திறன் தேர்வும் (Mental Ability Test),காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை Break Time-ம் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரைபகுதி II SAT Paper II படிப்பறிவுத் தேர்வும் (Scholastic Aptitude Test ) நடைபெறும்.
 • தேர்வர்களை 8.40 மணிக்கு தேர்வறைக்குள் அனுமதித்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை சரிபார்த்து உரிய இருக்கையில் அமர வைக்க வேண்டும்.
 • 8.45 மணிக்கு வினாத்தாள் உறை பெறப்பட்டு, 8.55 மணிக்கு அறைக் கண்காணிப்பாளர்களால் வினாத்தாள் உறை பிரிக்கப்பட்டு 9.00 மணிக்கு தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 • 5. தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாள் புத்தகத்தில் (Question Booklet) விடைகளைக் குறிக்க வேண்டாம் என்றும், வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் மட்டுமே (OMR Answer Sheet) விடைகளைக் குறிக்க வேண்டும் என்பதனையும் தேர்வர்களுக்கு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள்அறிவுறுத்தல் வேண்டும்.
 • 6. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மட்டுமே வழங்கப்படும். எனவே எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு குறைவாகவோ அல்லது அதற்கு மேலோ ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக்கூடாது. (கடைசி அறை தவிர)
 • தேர்வு முடிந்தவுடன் தேர்வர்கள் வினாத்தாள் புத்தகத்தை (Question Booklet) எடுத்துச் செல்லஅனுமதிக்க வேண்டும்.
 • இத்தேர்விற்கு (OMR ANSWER SHEET) விடைத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வர்கள் விடைத்தாளில் உள்ள கலங்களைப் பூர்த்தி செய்வது குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வறைகளிலும் தேர்வர்கள் விடைத்தாட்களைப் பூர்த்தி செய்வது குறித்த அறிவுரைகளைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும். தவிரவும் ஒவ்வொரு விடைத்தாளில் தேர்வர் தேர்விற்கு வருகைபுரிந்த விவரம் (Status of Candidates) P Or A என அறை கண்காணிப்பாளரால் (Hall Supervisor) நிழற்படுத்த வேண்டும்.
 • அறைக் கண்காணிப்பாளர் தேர்வர்களின் பதிவெண் மற்றும் பெயர் ஆகிய கலங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின் அவர் கையொப்பமிட வேண்டும். தேர்வர்கள் OMR விடைத்தாளில் தாம் எந்த கலத்திற்கான விடை சரி என நினைக்கிறாரோ அந்த கலம் கருப்பு மை கொண்ட பால் பாய்ண்ட் பேனாவினால் மட்டுமே நிழற்படுத்தப்பட வேண்டும் என தேர்வர்களுக்கு தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தல் வேண்டும்.
 • பெயர் பட்டியலில் திருத்தத்தினையும் சரிவர மேற்கொள்ளப்பட வேண்டும். திருத்தம் அனைத்தும் சிவப்பு மையினால் மட்டுமே செய்யப்பட வேண்டும். மேலும் வருகைப்புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் OMR விடைத்தாட்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
 • Mental Ability Test (Paper I) 11.00 மணிக்கு முடிந்தவுடன் விடைத்தாட்களை தேர்வர்களிடமிருந்து பெற்று பாதுகாப்பாக வைத்து, Scholastic Attitude Test (Paper II) தேர்வு தொடங்குவதற்கு முன்னர் OMR விடைத்தாட்களை அதே தேர்வருக்கு வழங்க வேண்டும்.
 • Scholastic Attitude Test (Paper II) தேர்விற்கான வினாத்தாட்களை 11.25 மணிக்கு தேர்வறை கண்காணிப்பாளர்களால் பிரிக்கப்பட்டு 11.30 மணிக்கு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு தேசிய திறனாய்வு தேர்வு பல வழிகாட்டுதலுடன் நடக்கிறது.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts