New Courses in government colleges | புதிய பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகளில் தொடங்க உத்தரவு
New Courses in government colleges
கல்லூரி கல்வி இயக்குனரகம் அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக முதலமைச்சர் அவர்களின் முதன்மை செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் துவங்குவது தொடர்பாக கருத்துருக்கள் அனுப்பும்போது நவீன காலத்திற்கு தொடா்புடைய BCA, MCA, BSc, (Electronics, Geography, Microbiology, Biochemistry, Visual Communication, etc) போன்ற பாடப்பிரிவுகளை துவங்க கருத்துரு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது.
Read Also: அரசு கல்லூரிகளில் 1895 உதவி பேராசிரியர்கள் விரைவல் நியமனம்
2023-2024ஆம் ஆண்டுக்கு புதிய பாடப்பிரிவுகள் துவங்குவது தொடர்பான கருத்துருவினை அனுப்ப வேண்டும். அதன் விவரம் பின்வருமாறு
1)துவங்க கருதப்பட்டுள்ள புதிய பாடப்பிாிவுகளுக்கு ஒப்பளிக்கப்பட்ட மாணாக்கர் சேர்க்கை முழுமையடைய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2) கல்லூரி அமைவிடத்திற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகள் துவங்குவது குறித்தும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்
3) துவங்கக் கருதப்படும் பாடப்பிரிவிற்கான இணைத்தன்மை பெறப்பட்டுள்ளமை மற்றும் சார்ந்த பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம் (சிலபஸ்) வகுக்கப்பட்டமை ஆகியவற்றை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
4)அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை குறைந்தபட்சமானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப பணிப்பளுவின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் கோரப்பட வேண்டும்.
5)மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் 2023-2024ஆம் ஆண்டிற்கு தங்கள் கல்லூரிகளில் புதியதாக துவங்க கருதப்படும் பாடப்பிரிவு தொடர்பான கருத்துருக்களை அப்பாடப்பிரிவு துவங்குவதற்கான நியாக்காரணிகளை விவரித்தும், இணைப்பில் காணும் படிவத்தை பூர்த்தி செய்து இம்மாத இறுதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.