Ponmudi latest press meet | அரசு கல்லூரிகளில் 1895 உதவி பேராசிரியர்கள் விரைவல் நியமனம்
Ponmudi latest press meet
செய்தியாளர்களை இன்று சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023ம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.
இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மான்யக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதியுள்ள நபர்களிடம் இருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர் தேர்வு செய்யப்படுவர்.
Read Also: TET Genuine Certificate News
தகுதியுள்ள நபர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் இன்று (15மு் தேதி) தொடங்கிவைக்கப்படுகிறது. கெளரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதியுள்ள நபர்கள் இன்று முதல் 29ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசலீக்கப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களை அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் மதிப்பூதியமாக வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சா் தெரிவித்தார்.