NEET Exam in Tamil | நீட் தேர்வு விண்ணப்பிக்கலாம்
NEET Exam in Tamil
அறிவியல் பிரிவில் பிளஸ் 2 கல்வியை முடிக்கும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் எனும் பொது நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பிக்கப்படும் கடைசி தேதியாக ஏப்ரல் 6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
NEET WEBSITE LINK – Click Here
Bachelor of Ayurvedic Medicine and Surgery, Bachelor of Unani Medicine and Surgery Bachelor of Siddha Medicine and Surgery, Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS) உள்ளிட்ட இந்த படிப்புகளுக்கு சேரவும் இந்த நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.
இந்த நீட் நுழைவுத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஓரு சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) உள்ளிட்ட பாடபிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரமாக 3 மணி நேரம், 20 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை நடைபெறும்.
Read Also: Medical Course Details in Tamil
இந்த தேர்வு 13 மாநில மொழிகளில் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆங்கிலம், இந்தி, அசாம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது.
நீட் தேர்வு கட்டணம் என்ன
