National Service Scheme Aim in Tamil | நாட்டு நலப்பணித்திட்டம் குறிக்கோள்
National Service Scheme Aim in Tamil
நாட்டு நலப்பணித்திட்டத்தின் மாணவர் தொண்டர்களை ஈடுபாடு, சேவை, சாதனை போன்ற குறிக்கோள்களை உடையவர்களாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மாணவ தொண்டர்களுக்கு பயிற்சி அளிப்பதன் வாயிலாக இம்மூன்று குறிக்கோள்களையும் உடையவர்களாக மாணவர்களை உருவாக்க முடியும்.
Read Also: NSS scheme Details in Tamil
- இக்குறிக்கோள்களை எட்டுவதற்கு மூன்று செயல்பாடுகள் இன்றியமையாதவனாக அமைகின்றன.
- கல்வியை இன்றைய சூழலுக்கு பொருத்தமுடையாக்குதல்
- கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மட்டுமின்றி நகர்புறங்களில் வாழும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு தேவையான திட்டங்களை மாணவர்கள் வகுத்தல்
- மாணவர்கள் மற்றும் மாணவரல்லாதவர்கள் பெரியவர்களோடு இணைத்து கிராமங்களில் பணியாற்ற ஊக்குவித்தல்
- மாணவர்களிடம் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களின் ஆளுமை திறன் வளர்த்தல்
- உழைப்பின் உயர்வு, சுயதொழில் மற்றும் உடல் சார்ந்த வேலைகளில் அறிவார்ந்து செயல்படுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்தரைத்தல்
- நாட்டின் முன்னேற்றத்திலும் தேசிய ஒருமை பாட்டை காப்பதிலும் இளைஞர்களை ஊக்குவித்தல்
- இத்தகைய செயல்பாடுகளை செய்யும் பொழுது ஒவ்வொரு மாணவர் தொண்டர்களும் ஒழுக்கம், உறுதி கலாச்சார மேம்பாடு ஆகியவற்றில் உறுதியடைய முடியும்.