National Science Day in Tamil | தேசிய அறிவியல் தினம் | தேசிய அறிவியல் தினம் நோக்கம்
National Science Day in Tamil
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி இந்தியாவில்
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நாட்டிற்காக போராடி சுதந்திரம பெற்ற தேசத்தலவைர், தியாகிகள் ஆகியோர்களை கொண்டாடி போற்றும் வகையில், அறிவியல் மேதைகளையும் போற்ற வேண்டும் என்ற குரல் ஒலித்தது. இதனை அங்கீகரிக்கும் வகையில், இந்தியா 1987ஆம் ஆண்டு இந்திய தேசிய அறிவியல் நாள் ஆக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று.
சா்.சி.வி ராமன்
மற்ற நாட்களை போல் அல்லாமல், அறிவியல் தினம் ஒரு சிறப்பான வரலாறுடன் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பொதுவாக நாட்டு தலைவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களே சிறப்பு நாட்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகை இல்லாமல், இந்நாட்டு மண்ணில் பிறந்து இந்த உலகம் போற்றும் வகையில், பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும், சிறந்த இயற்பியல் மேதையான சர்.வி.ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.சர்.சி.வி ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு என்பது உலகளாவிய பெருமையை இந்த நாட்டிற்கு பெற்றுத்தந்தது மட்டுமின்றி, உயரிய விருதான நோபல் பரிசும் 1930 இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும், அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அரசு இந்த நாளை தேசிய அறவியல் நாளாக பிரகடனப்படுத்திய நாள் இன்று.
Read Also: அறிவோம் மழலையர் கல்விஅறிவியல் தினம் நோக்கம் என்ன?
எந்த ஒரு நாகரீகத்திற்கும் அடிப்படை அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளை கண்டறிவதும், அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிகடன் என்பதை உணர செய்வதே இந்தாளின் நோக்கமாகும்.அதன்படி தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது.
அறிவியல் என்றால் என்ன
அறிவியலின் நான்கு அடிப்படை நிலைகள் உள்ளன.
கேள்வி எழுப்புதல்:ஏற்கனவே உள்ள புரிதலை உற்று நோக்கி பகுப்பாய்வு செய்து, புதிய கேள்விகை எழுப்புதல்
கருதுகோள்/கோட்பாடு:எழுப்பிய கேள்விக்கான பதிலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆய்வு / ஆதாரம்:எந்த ஒரு கருதுகோளும் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடியாக இருக்க வேண்டும். கருதுகோள் கேள்விக்கான விடைக்கு ஆதரவான ஆதாரங்களை திரட்ட வேண்டும். கருதுகோளை சரி என்றோ தவறு என்றோ அந்த ஆதாரங்களை நிருபிக்கும்.
முடிவு:மேற்கண்ட வகையில் கிடைக்கும் முடிவு எப்படி இருந்தாலும் அது அறிவியல் முறைப்படி கிடைத்தது என்பதால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மனதளவில் நாம் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் கூட, மாறாக, நமக்கு கிடைத்த விடை தவறு, சரியான முடிவு வேறு மாதிரி இருக்கும் என நினைத்தால் மீண்டும் கேள்வியில் இருந்து ஆரம்பித்து புதிய தலைமுறையில் நமது ஆய்வு தொடங்க வேண்டும்.