Namma School scheme in Tamil | நம்ம ஸ்கூல் திட்டம் என்றால் என்ன
Namma School scheme in Tamil
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில்
நம்ம ஸ்கூல் என்னும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் (19-12-2022) இன்று காலை தொடங்கி வைகக்கிறார்.
அரசு பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுசுவர், வண்ணம்பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் திட்டம் உள்ளது.
இதன் தொடக்கவிழா, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று காலை நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறார்.
Read Also: Chief Minister Fellowship Program PDF
இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்பவர்கள், எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழாவில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவர் விஸ்வநாதன் ஆனந்த், நம்ம ஸ்கூல் பவுண்டேசன் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.