You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Chief Minister Fellowship Program PDF | தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாய்வு திட்டம்

Chief Minister Fellowship Program PDF|

Chief Minister Fellowship Program PDF | தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாய்வு திட்டம்

தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கு (2022-24) தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1.தமிழ்நாடு அரசு தனது அனைத்து துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கிட பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டு கால தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Chief Minister Fellowship Program PDF details in Tamil

திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறைமையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இளம்வல்லுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, இடையூறுகளை கண்டறிவது மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவது ஆகியவை அவர்களது முக்கிய பணிகளாகும்.

இவை சேவை வழங்கலில் ஏதேனும் இடைவெளிகள் இருந்தால் அவற்றினை நிவர்த்தி செய்திடவும், உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நிகரான அரசின் சேவைகளை வழங்கிடவும் வழிவகை செய்யும். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஒருங்கிணைப்பு துறையாக செயல்படும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் கல்வி பங்களராக செயல்படும்.

2.இந்திட்டத்திற்கு மொத்தம் 30 வல்லுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் ஒவ்வொரு கருப்பொருள் பகுதிக்கும் இரண்டு வல்லுநர்களுக்கும் மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறையின் கண்காணிப்பு பிரிவுக்கு ஆறு வல்லுநர்களும் நியமிக்கப்படுவார்கள்.

READ ALSO THIS: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் | ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு என்ன பலன்?

Chief Minister Fellowship Program topic

2022-24 ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டு கருப்பொருள் பகுதிகள் பின்வருமாறு

  1. நீர் வளங்களை மேம்படுத்துதல்
  2. வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல்
  3. அனைவருக்கும் வீடு
  4. கல்வித்தரத்தை உயர்த்துதல்
  5. சுகாதார குறியீடுகளை மேம்படுத்துதல்
  6. அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம்
  7. உட்கட்டமைப்பு மற்றும் தொழில்வளர்ச்சி
  8. திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு
  9. முறையான கடன்
  10. மரபு மற்றும் பண்பாடு
  11. சுற்றுச்சூழல் சமநிலை
  12. தரவு நிர்வாகம்
3. விண்ணப்பதாரர்கள்: முற்றிலும் தேர்வு செயல்முறை செயல்திறனில் தகுதியின் அடிப்படையிலேயே (கல்வி நிறுவனங்களில் சோ்க்கைக்கு பின்பற்றப்படும் தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றி) தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட இளம் வல்லுநர்கள், இணைய வழி விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்ட சான்றுகள், தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இத்திட்டத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

4 கால அளவு: மற்றும் உதவித்தொகை இந்த புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வல்லுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.65,000 மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவு, கைப்பேசி மற்றும் தரவு பயன்பாடு போன்ற செலவினத்திற்கான மாதம் ரூ.10,000 கூடுதல் தொகையாக வழங்கப்படும். இவற்றை தவிர கூடுதல் நிதி உதவி எதுவும் வழங்கப்படமாட்டாது.

5. தகுதி விண்ணப்பதாரர் தொழிற்கல்வி படிப்புகள் (பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை அறிவியல்) தொடர்பாக இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு (அல்லது) கலை/அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பை இந்தியாவில் மத்திய அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் இணைக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் அல்லது பாராளுமன்ற சட்டத்தால் நிறுவப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் அல்லது பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956, பிரிவ 3ன் கீழ் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட பிற கல்வி நிறுவனங்களில் இருந்து பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

  1. முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
  2. பணி அனுபவம் கூடுதல் அனுகூலமாக கருதப்படும்
  3. ஆராய்ச்சி அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
  4. தமிழ் மொழி பயன்பாட்டுதிறன் கட்டாயமானது.
வயது வரம்பு, விண்ணப்பதாரரின் வயது 25.05.2022ன் படி 22-30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சாாந்த விண்ணப்பதாரர்களுக்கு 33 ஆகவும் இருக்க வேண்டும்.

Chief Minister Fellowship Program exam procedure

தேர்வு செயல்முறைகள் பின்வரும் மூன்று நிலைகள் உள்ளடக்கியது

நிலை 1 முதற்கட்ட தேர்வு (கணினி அடிப்படையிலானது)

  1. நிலை 2 விரிவான தோ்வு (எழுத்து தேர்வு)
  2. நிலை 3 நேர்முகத் தேர்வு
  3. முதற்கட்ட தேர்வு என்பது அதிகபட்சம் 150 புள்ளிகளை கொண்ட கொள்குறி வகை வினாக்களை கொண்ட கணினி அடிப்படையிலான தோ்வு.
கணினி அடிப்படையிலான தோட்வுகளில் மூன்று பிரிவுகள் இருக்கும்.

  1. General Knowledge
  2. Quantitative Aptitude
  3. Verbal comprehension and logical reasoning
இந்த தேர்வின் முக்கிய நோக்கம் தகுதியுைடய விண்ணப்பதாரர்களை அடுத்த நிலைக்கு தேர்வு செய்வதாகும். மேலும், அதில் பெறப்படும் புள்ளிகள் இறுதி தேர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும்.(ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.33 புள்ளிகள் குறைக்கப்படும்). தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் கொச்சி, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, விசாகப்பட்டனம் ஆகிய நகரங்களில் இந்த தேர்வு மையங்கள் இருக்கும்.

விரிவான தேர்வு என்பது எழுத்து தேர்வாகும். வினாக்கள் வழக்கமான கட்டுரை எழுத்து வகையை சேர்ந்தவை. ஆளுகை, சமூக நீதி, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, நீடித்த நிலையான வளர்ச்சி, வறுமை, மக்கள் தொகையியல், சுற்றுச்சூழல், உயிர் பன்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் கொள்ளைககள், தமிழ் பாரம்பரியம், கலாச்சாரம் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளிட்ட தலைப்புகளில் வினாக்கள் இருக்கும். இந்த விரிவான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெறும். விரிவான தேர்வில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நோ்முகத்தேர்வு விண்ணப்பதாரர்கள் செயல்திறன் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரர்கள் அறிவார்ந்த மற்றும் நடப்பு விவகாரங்கள் பற்றிய அறிவு மற்றும் முறையான சிந்தனையின் திறன் ஆகியவற்றை மதிப்பிடும் வகையில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நோ்முகத் தேர்வில் தமிழ் மொழி பயன்பாட்டு திறன் குறித்த செயல்முறை தேர்வு மேற்கொள்ளப்படும். நோ்முகத் தேர்வு சென்னையில் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் விரிவான எழுத்து தோ்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

இணையவழி விண்ணப்பங்களை https://www.tn.gov.in/tncmfp   என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.06.2022 ஆகும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. இணையவழியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Chief Minister Fellowship Program PDF
Chief Minister Fellowship Program PDF
முக்கிய தேதிகள்: தேதிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை, இதற்கான தேதிகளில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின், அவை, https://www.tn.gov.in/tncmfp  அல்லது https://www.tn.gov.in/tncmfp  என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளாம். 10.06.2022 அன்று மாலை 6 மணி வரை இணையதள விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த திட்டம், தேர்வு செய்யப்பட்ட வல்லுநர்களுக்கு 30 நாள் கட்டாய நோக்கு நிலை பயிற்சியுடன் தொடங்குகிறது. நோக்கு நிலை பயிற்சி திருப்திகரமாக நிறைவுற்றவுடன், சிறப்பு திட்ட செயலாக்கு துறை மூலம் கருப்பொருள் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு துறைகளில் வல்லுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களில் முதன்மை பணி கண்காணித்தல், இடையூறுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை அடையாளம் காணுதல் மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எபடுப்பதற்கு உதவுவதும் அவர்களின் முதன்மை பணியாகும்.

இவை சேவை வழங்கலில் ஏதேனும் இடைவெளி இருப்பின் அதனை நிவர்த்தி செய்திட வழிவகை செய்யும். கள நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், கருத்துகளை பெருவதற்கும் பொருத்தமான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவுவதற்கும் அவர்கள் மாவட்டங்களுக்கு களப்பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

வல்லுநர்கள் தங்கள் மாதாந்திர செயல்பாட்டு அறிக்கைகளை சிறப்பு திட்ட செயலாக்க துறையில் உள்ள தங்கள் வழிகாட்டியிடமும், பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உள்ள வழிகாட்டியிடமும் ஆய்வு, வழிகாட்டல் மற்றும் செயல்திறன் மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வப்போதும் எழும் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பொறுப்புகள் ஒதுக்கப்படும். வல்லுநர்கள் இரண்டு ஆண்டு பதிவிக்காலத்தின் முடிவில் இறுதி திட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இரண்டு வருட புத்தாய்வு திட்டத்தை திருப்திகரமாக நிறைவு செய்யும் வல்லுநர்களுக்கு பொது கொள்கை மற்றும் மேலாண்மை முதுகலை சான்றிதழ் வழங்கப்படும. இதுதவிர ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்ட காலத்தில், வல்லுநர்கள் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் எனில், தன்னுடைய விலகல் கடிதத்தை 30 நாட்களுக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் வல்லுநர்கள் என்பது தற்காலிக பொறுப்பாகும். மேலும் எந்தவொரு பொறுப்பிற்கான பணிநியமனம் அல்லது பணியை தொடர்வதற்கான எந்தவொரு உரிமையையும் உரிமை கோரலையும் செய்ய இயலாது.

தவறான நடத்தை, திருப்தியற்ற செயல்திறன், விண்ணப்பதாரர் தகுதியற்றவர் என்று கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரர் ஏற்கனவே வேறு எந்த ஆதாரங்களிலிருந்தும் இதுபோன்ற பொறுப்பினை பெற்றிருந்தால், விண்ணப்பதாரால் வழங்கப்பட்ட தவறான தகவல்கள் அல்லது எந்தவொரு மோசடி நடவடிக்கைளும் கண்டறியப்பட்டால் இத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்திட தகுதியுடையதாகும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும்.

Chief Minister Fellowship Program PDF Download Here