Nam Palli Nam Perumai Song Download | நம் பள்ளி நம் பெருமை பாடல் வெளியீடு
Nam Palli Nam Perumai Song Download
பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் ராப் பாடகர் அறிவு கொண்டு
நம் பள்ளி நம் பெருமை என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பு ஏற்ற பின்பு, மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொரோனா சூழலால் கற்றல் பாதிப்பு அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் தன்னார்வலர்கள் கொண்டு, 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு குடியிருப்பு பகுதிகளில் மாலை நேர வகுப்புகள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சரியான பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் நோக்கில், அரசு பள்ளியின் முதுகெலும்பாக உள்ள பள்ளி மேலாண்மை குழுவை பலப்படுத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. கல்வித்துறையின் ஐஏஎஸ் அதிகாரிகளான சுதன் மற்றும் இளம்பகவத் ஆகியோர் இதற்கான முன்னெடுப்பு தொடங்கியுள்ளனர்.
Also Read This | பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?
நம் பள்ளி நம் பெருமை பாடல்
குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு கல்வி அமைப்புகள், கல்வியாளா்களை ஒருங்கிணைத்து பள்ளி மேலாண்மை குழுவினை பலப்படுத்துவதற்கான செயல்பாடுகளை தொடங்கினர் மற்றும் பயிற்சி கூட்டங்களும் நடத்தப்பட்டது. தற்போது, பள்ளி மேலாண்மை குழுவில் இல்லம் தேடி தன்னார்வலர்களையும் ஈடுபடுத்தி உள்ளனர். இதன்மூலம், பள்ளி மேலாண்மை குழு குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை அந்த குழுவில் பங்கேற்கச் செய்வதே அதன் நோக்கமாகும். இதன்மூலம் அரசு பள்ளிகளில் பள்ளி வளர்ச்சி, தரமான கல்வி உறுதி செய்ய முடியும். இதன் ஒரு நிகழ்வாக, பிரபல தமிழ் ராப் பாடகர் மூலம்
நம் பள்ளி நம் பெருமை என்ற பாடல் உருவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பாடல் இணையதளத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
நம் பள்ளி நம் பெருமை பாடல் காண்க - CLICK HERE