Naan Mudhalvan Scheme Latest News in Tamil | நான் முதல்வன் திட்டம் ஐடிஐ சேர்க்கை
Naan Mudhalvan Scheme Latest News in Tamil
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர ஏதுவாகத் தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை அரசின் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழிகாட்டதல் சார்ந்து தமிழக முதல்வர் அவர்கள் மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்படி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான திட்டமிடல் கூட்டமானது இணையவழியில் 13.7.2023 அன்று நடைபெற்றது. இம்முயற்சியில் சார்ந்த மாவட்டத்தின் பள்ளி மேலாண்மை குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நான் முதல்வன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிேயார் சார்ந்த மாவட்டங்களில் இணைந்து ஜூலை 19ம்தேதி முதல் பள்ளிகளில் சேர்க்கை முகாம் அமைத்து செயலாற்றி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக, மாணவர்கள் ஐடிஐ சேர்க்கை பெற அருகமை ஐடிஐ கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கை விண்ணப்பங்கள் செய்யும் பொழுது 8ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஒப்படைக்க வேண்டுமென கல்லூரிகளில் கேட்கப்படுவதாக நமது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வாயிலாக அறிய முடியகிறது. மாணவர்கள் கல்லூரியில் சேர்வதில் ஏற்படும் இச்சிரமங்களை தடுக்க 8ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழங்கி அவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.