ITI courses in Tamil | ஐடிஐ படிப்புகள்
ITI courses in Tamil
தொழிற்சாலைகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், அதற்கான மனித வளத்தை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாக்கியே ஐ.டி.ஐ.க்கள் செயல்படுகின்றன.
நாடு முழுவதும் சுமார் 13 ஆயிரம் அரசு, தனியார் ஐ.டி.ஐ.க்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் தற்போது 102 தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றில் 10 மகளிருக்கானது. இரு மையங்கள் எஸ்.சி. பிரிவினருக்கானவை. 6 மையங்கள் எஸ்.டி பிரிவினருக்கானவை. சிறைவாசிகளுக்கான ஒரு தொழிற்பயிற்சி மையமும் உள்ளது.
இந்த மையங்களில் பொறியியல் சார்ந்த 58 தொழில்நுட்பப் பயிற்சிகளும், பொறியியல் சாராத 26 தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பிளம்பர் ஃபிட்டர், வாகனப் பழுதுநீக்குவோர், மின்சாரத் தொழில்நுட்பம் என அடிப்படைப் பயிற்சி சான்றிதழ் படிப்புகள் உள்ளன.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தொழிற்பயிற்சி மையங்களில் (ஐ.டி.ஐ.) மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அவற்றில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் வரை சேரலாம். அதாவது, 14 வயது முதல் 40 வயதானவர்கள் வரையில் தொழிற்பயிற்சியில் சேரலாம்.
தொழிற் பயிற்சி மையங்களில் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பட்டயச் சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் சேருேவாருக்கு மாதந்தோறும் 750 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சி மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளைப் போலவே இலவச மடிக்கணினி, மிதி வண்டி, புத்தகங்கள், வரைபட சாதனங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
பயிற்சி முடித்தவர்களுக்கு, தேசிய தொழில் வர்த்தக மையத்தின் வழிகாட்டலின் கீழ் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு, அரசு சார்ந்த, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக கடனுதவியும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.
பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள்
தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் தமிழகத்தின் 51 அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இதில் 5 மகளிர் பாலிடெக்னிக்குகளாகும். இவை தவிர நுற்றுக்கணக்கான தனியார் பாலிடெக்னிக்குகள் உள்ளன.
பாலிடெக்னிக்கில் பொறியியல் படிப்புகள் 3 ஆண்டு முழுமையான பட்டய படிப்பாகக் கற்பிக்கப்படுகிறது. இதில் ஆண்டுக்கு தலா 2 பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இயந்திரப் பொறியியல், கட்டுமானப் பொறியியல், மின்னியல், மின்னனுவியல், கணினிப் பொறியியல், ஜவுளித் தொழில்நுட்பம் ஆகியவை பிரதான டிப்ளமோ படிப்புகளாகும்.
பாலிடெக்னிக்கில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், அறிவியல் பாட மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். டிப்ளமோ படித்தவர்கள் மாலை நேர பொறியியல் கல்லுரிகளில் இனணந்து பி.இ. பயில முடியும். தவிர, பொறியியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்று நேரடியாக இரண்டாமாண்டு சேர்க்கையும் பெற முடியும்.
புதிய டிப்ளமோ படிப்புகள்
பாலிடெக்னிக் கல்லுாிகளில் காலத்துக்கேற்ப கடந்த சில ஆண்டுகளாக பாலிமர் தொழல்நுட்பம், ரப்பர் தொழல்நுட்பத் துறைகள் செயல்படுகின்றன. சென்னையிலுள்ள தரமணி, மதுரை அரசு பாலிடெக்னிக் மற்றும் விருதுநகரில் அரசு உதவி ெபறும் பாலிடெக்னிக்கில் இந்தப் படிப்புகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் சேரலாம். இந்தப் படிப்பானது 3 ஆண்டுகள் படிப்பு, 6 மாதங்கள் பயிற்சி என அமைந்துள்ளது.
இநு்து இரு படிப்புகளையும் மிகக் குறைந்த செலவில் படித்து பட்டம் பெற்றவர்கள் கோவை, ஓசுர், மகாராஷ்டிர, மாநிலம் மும்பை, புணே, குஜராத் மாநிலம் பரோடா ஆகிய பகுதிகளில் உள்ள ரப்பர், பாலிமர் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
தற்போது பாலிடெக்னிக் கல்லுரிகளில் சேருவோர் உடனடி வேலைவாய்ப்புகளை அளிக்கும் ரப்பர், பாலிமர் துறை சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்கிறார் மதுரை அரசு தொழற்பயிற்சி மைய இயக்குநர் ரமேஷ்.