You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Moovalur Ramamirtham Scheme 2022 | பல்வேறு சிக்கலால் விண்ணப்பிக்க முடியாமல் திணறும் கல்லூரி மாணவிகள்

TN Engineering Course Cut off Mark Details in Tamil

Moovalur Ramamirtham Scheme 2022 பல்வேறு சிக்கலால் விண்ணப்பிக்க முடியாமல் திணறும் கல்லூரி மாணவிகள்

Moovalur Ramamirtham Scheme 2022

கல்வி மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் க லெனின்பாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும், மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டிற்குரியது.

Read Also This: ரூ.1000 உதவித்தொகை |PENKALVI SCHOLORSHIP Apply Online| https://penkalvi.tn.gov.in

இதன்கீழ், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

கல்லூரிகளில்  முதலாமாண்டு சேர உள்ள மற்றும் தற்போது இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டிற்கு செல்லவிருக்கும் மாணவிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஆனால் இணைய தளம் வழியே விண்ணப்பிக்கும் போது பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. பல பள்ளிகளின் பெயர்கள் மற்றும் கல்லூரிகளின் பெயர்கள், பாடப்பிரிவின் பெயர்கள் update செய்யப்படாமல் உள்ளதால் மாணவிகள் ஜூலை 10 தேதிக்குள் விண்ணப்பம் செய்ய பல்வேறு சிக்கல்கள் எதிர்கொள்கின்றன. எனவே முழுமையாக அனைத்து பள்ளிகளின், கல்லூரிகளின், பாடப்பிரிவுகளின் பெயர்கள்  ஆகியவைகளை முழுமையாக update செய்ய வேண்டும்.

அதன் பின் கால அவகாசம் கொடுத்து சிக்கல்கள் இல்லாமல் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாணவிகள் அனைவரும் விண்ணபிப்பதை உறுதி செய்யும் வகையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்.

இதுபோன்று அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவிகள் படித்து, தற்போது கல்லூரியிலும் பயின்று வருகின்றனர். அவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தினை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.