You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Model Exam for classes 6 to 9 | 6 முதல் 9ஆம் வகுப்பு மாதிரி தேர்வுக்கு கடும் எதிர்ப்பு

Typing exam apply Tamil 2023

Model Exam for classes 6 to 9 | 6 முதல் 9ஆம் வகுப்பு மாதிரி தேர்வுக்கு கடும் எதிர்ப்பு

Model Exam for classes 6 to 9

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு, ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

6 - 9 வகுப்புகளில் மீண்டும் உருவாக்கப்பட்ட கற்றல் இடைவெளி!   மாதிரித் தேர்வு மூலமும் முழு ஆண்டுத் தேர்வு மூலம் எதை மதிப்பீடு செய்ய முடியும்? 

தற்போது ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாதிரி தேர்வுகள்  ஏப்ரல் 6 முதல் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை மூலம் அறிவிப்பு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் பருத்தேர்வையும் முழு ஆண்டுத் தேர்வையும் நடத்தவேண்டும் என்று அறிவிப்பு வந்துள்ளது.  தமிழ்நாடு முழுமைக்கும் ஒரே வினாத்தாள் ஒவ்வொரு தேர்வுக்கும் கல்வித் துறையின் மூலம் இணைய வழியில் அனுப்பப்படுவதை நகல் எடுத்துப் பயன்படுத்தும்படி தலைமை ஆசிரியர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

ஆறாம் வகுப்பு,  ஏழாம் வகுப்பு  பாட நூலில் மூன்றாவது பருவத்தில் ஏப்ரல் மாதத்தில் கற்பிக்க வேண்டிய பாடங்களும் உள்ளன. தேர்வுக்குரிய பாடங்கள் குறித்து  கல்வித் துறை எதுவும் கூறவில்லை.  இந்நிலையில், மாதிரித்  தேர்வுகள் நடத்தவேண்டும் என்று இரண்டு வேலை நாட்களுக்கு முன்பு தான்  அறிவிக்கப்பட்டது. முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால் ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டிய பாடங்களை ஆசிரியர்கள் முன் கூட்டியே நடத்தி முடித்திருப்பார்கள். 

Read Also: 6 முதல் 9ஆம் வகுப்பு மாதிரி தேர்வு அட்டவணை  

கல்வி உரிமைச் சட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை எந்தப் பொதுத் தேர்வும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.  ஆனால், 6 முதல் 9 வகுப்புகளிலும்  மாநிலம் முழுவதும் ஒரே  தேர்வு என்ற நடத்தலாம் என்று கல்வித்துறை முயற்சி செய்வதாகத் தெரிகிறது. தேர்வு முறைகள் மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களிடமும் எந்தக் கருத்துக் கேட்பும் நடத்தவில்லை. 

திடீரென்று நடத்தப்படும் இது போன்ற தேர்வு மாற்றங்கள் ஏன்?  எதற்கு?  என்று ஆசிரியர்களுக்குத் தெரியாது. 

பெரும்பாலும் நாம் பின்பற்றும் எழுத்துத் தேர்வுகள் மனப்பாடத் திறன் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.  அதையும் முழுமையான கற்றல் கற்பித்தல் நடைபெற வாய்ப்பு பிடிக்காமல் நடத்துவது நியாயமற்றது. இக்கல்வியாண்டில் பள்ளி அளவிலான வட்டார அளவிலான மாவட்ட அளவிலான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றதால் கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் வகுப்பறை கற்பித்தல் என்பது அரைகுறையாகவே நடந்தன.

அடுத்ததாக ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வினாடி வினா போட்டிகள், இலக்கிய மன்றப் போட்டிகள், சிறுவர் திரைப்படம் சார்பான போட்டிகள், வானவில் மன்ற அறிவியல் ஆய்வுப் போட்டிகள் பள்ளி அளவில் வட்டார அளவில் மாவட்ட அளவில் நடந்து வருகின்றன. 

இதற்கிடையில் இந்த வாரத்தில் கூட மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் ஒரு முறை பயன்பாட்டு நெகிழி ஒழித்தல் போட்டிகளை நடத்தும்படி கூறப்பட்டது. சில போட்டிகள் பள்ளி விடுமுறை நாளில் நடத்தப்படுகின்றன. பள்ளியில் சாலை விழிப்புணர்வு, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு  நடத்தும்படியும் அறிவிக்கப்பட்டது.

பல்வேறு வகையான போட்டிகளை பள்ளிகளில் நடத்த வேண்டிய சூழலில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை பாடநூலில் உள்ள பாடங்களைக் கற்பிப்பது சார்ந்த வகுப்பறைச் செயல்பாடுகள்  அரைகுறையாகவே நடந்துள்ளன. 

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பது வகுப்பு வரை  மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதை விட  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகித  அழுத்தம் தான் ஆசிரியர்களுக்கு  அதிகமாக உள்ளது.  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார்கள். முழு நேரத் தலைமையாசிரியர் இருக்கிறார். பாடத்திற்கு ஒரு ஆசிரியர் உள்ள உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடைபெறுவதால் பெரிய அளவில் கற்றல் கற்பித்தல் பாதிக்கப்பட வாய்ப்பிருக்காது.

ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க பெரும்பாலான பள்ளிகளில் தலைமை ஆசிரியரும் இரண்டு பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 

பல்வேறு வகையான போட்டிகளுக்கு மாணவர்களைப் பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் தயார் செய்ய வேண்டிய நிலை  உள்ளது.  இன்றைக்குப் பள்ளிக்குச் சென்றால் என்ன செய்ய வேண்டும்? என்று ஆசிரியர்களுக்கு தெரியாத நிலையில்  நடுநிலைப் பள்ளிகளின் கல்விச் சூழல் உள்ளது. வாரத்தில் ஒரு நாளாவது ஒரு ஆசிரியர் வட்டார அளவிலான போட்டிக்கு மூன்று, நான்கு மாணவர்களை அழைத்துச் சென்று விடுவார். இதனால் பல நேரங்களில் ஆசிரியர் இல்லாத வகுப்பறைகள் தான் இயங்குகின்றன. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாதது பிற  ஆசிரியர்களுக்கும் இடையூறாக மாறிவிடுகிறது.

"சார் நமக்கு என்ன சார்... அதிகாரிகள்  சொல்வதைச் செய்துவிட்டு போவோம்" என்ற நிலையில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

கொரோனா விடுமுறையால் இரண்டு ஆண்டுகள் மிகப்பெரிய கற்றல் இடைவெளி ஏற்பட்ட பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதை விட கற்றல் கற்பித்தலில் முழு வாய்ப்பை கல்வித்துறை  உருவாக்கத் தவறிவிட்டது. அடுத்த கல்வி ஆண்டிலும் இதே நிலை தொடரக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.