Model Exam for classes 6 to 9 | 6 முதல் 9ஆம் வகுப்பு மாதிரி தேர்வு அட்டவணை
Model Exam for classes 6 to 9
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சேலம் மாவட்டம் 2022-2023ஆம் கல்வியாண்டு அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடைபெற திட்டமிட்டுள்ளது. உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வினாத்தாள் அனுப்பப்படும். நடுநிலை பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் வினாத்தாள் அனுப்பிவைக்கப்படும்.
Read Also: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்

எனவே பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளில் வழங்கப்பட்ட பிரிண்டரை முறையாக இன்ஸ்டால் செய்து, மாதிரி தேர்விற்கும் வினாத்தாள் பிரிண்ட் எடுப்படுதற்கு தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எவ்வித புகாருக்கு இடமளிக்கா வண்ணம் தேர்வினை நன்முறையில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.