Medical Course Fees in Tamil | மருத்துவ படிப்பு கட்டணம் உயர்வு
Medical Course Fees in Tamil
நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த புதன்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், அதற்கான தகவல் தொகுப்பேடு வெளியிடப்பட்டது.
Read Also: Medical Course Details in Tamil
அதில் கடந்த கல்வி ஆண்டு காட்டிலும், நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக கல்வி கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஆண்டு வரை எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.13,610 இருந்தது. நடப்பு கல்வியாண்டில் அது ரூ.16,073 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் கட்டணம் ஆண்டுக்கு ரூ 12,073 ஆக உள்ளது. தனியார் கல்லூாிகளில் உள்ள அரசு எம்பிபிஎஸ் ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை குறைந்தபட்ச கட்டணமாக வேலூர் சி.எம்.சி. கல்லூரியில் ரூ.53 ஆயிரமும் , பிற கல்லூாிகளில் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிடிஎஸ் படிப்புக்கு ரூ.2.50 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது, மருத்துவ மாணவர்கள் நூலக பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை விரிவுப்படுத்தியிருப்பதால் அதற்காக குறைந்த அளவில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின் மாணவர்கள் நலன் பாதிக்காதவாறு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.