You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

MBA MCA ADMISSION 2022 – tnmbamca.com | எம்பிஏ எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Typing exam apply Tamil 2023

MBA MCA ADMISSION 2022 – tnmbamca.com | எம்பிஏ எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

READ ALSO THIS: B.E Part Time admission 2022-23 | பகுதி நேர பி.இ பட்டபடிப்பு விண்ணப்பிக்கலாம்

MBA MCA ADMISSION 2022 – tnmbamca.com

செய்தி மக்கள் தொடர்புத்துறை, இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், துறைகள் (University Departments), வட்டார மையங்கள் (Regional Centers), அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், இதர பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், சென்னை 600 025 மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம், சென்னை 600 006 அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்பிஏ/எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு (MBA/MCA) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள்

விண்ணப்பிக்கும் முறைகள் :

இந்த இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எம்பிஏ மற்றும் எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யம் நாள்: துவங்கும் நாள் – 11.07.2022 முடிவுறும் நாள் – 5.8.2022

பதிவுக்கட்டணம் :

பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் debit card/credit card/ net banking இணையதளம் வாயிலாக மட்டும் செலுத்தலாம்.

இந்த கல்வியாண்டில் எம்பிஏ/எம்சிஏ முதுநிைல பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்ப பதிவு, சான்றிதழ் பதிவேற்றம், சான்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதள முகவரியில் “Information and Instructions to Candidates” பார்க்கவும்.

MBA/MCA Admission Helpline Number

மேலும் விவரங்களுக்கு 0422-2451100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.