You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

B.E Part Time admission 2022-23 | பகுதி நேர பி.இ பட்டபடிப்பு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்|ptbe-tnea.com

Typing exam apply Tamil 2023|

B.E Part Time admission 2022-23 | பகுதி நேர பி.இ பட்டபடிப்பு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் | ptbe-tnea.com

B.E Part Time admission 2022-23

பகுதி நேர பி.இ பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் (ஜூலை 4ம் தேதி) மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read Also: பகுதிநேர பிஇ படிப்பு அட்மிஷன் 2023- 2024 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை

இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு தகுதிவாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து, பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பி.இ பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

B.E Part Time admission 2022-23
B.E Part Time admission 2022-23

B.E Part Time admission 2022-23 - College List

அவை முறையே அரசினர் பொறியியல் கல்லூரி- கோயம்புத்தூர், அரசினர் பொறியியல் கல்லூரி-சேலம், அரசினர் பொறியியல் கல்லூரி -திருநெல்வேலி, அழகப்ப செட்டியார் அரசு பொறியயில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி- காரைக்குடி, தந்தை அரசினர் பொறியற் கல்லூரி- வேலூர், அரசினர் பொறியியற் கல்லூரி -பர்கூர், கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தியாகாராஜர் பொறியியல் கல்லூரி மதுரை ஆகும்.

B.E Part Time admission 2022-23 - Eligibility

இதற்கான தகுதி, விண்ணப்பாதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறவைு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தராகவோ இருக்க வேண்டும்.

BB.E Part Time admission 2022-23- www.ptbe-tnea.com

விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். இதற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் (4.7.2022) துவங்கி, ஆகஸ்ட் 3ம் தேதி நிறைவடைகிறது. மேலும் பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேக்கிங் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை (டிப்சி) மையத்தினை பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்து டிஎப்சி மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BB.E Part Time admission 2022-23- Helpline Number

இந்த கல்வியாண்டில் பகுதி நேர பி.இ பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாகவே மட்டுமே நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். மேலும் 0422-2490080, 9486977757 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.