Mandous cyclone school leave Update | மாண்டஸ் புயல் பள்ளி விடுமுறை
Mandous cyclone school leave Update
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் புயலாக மாண்டஸ் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read Also: அறிவோம் பேரிடர் மேலாண்மை குழுவின் பணிகள்
பபுயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். நாளை விடுமுறை (10.12.2022) அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், சென்னை, திருவள்ளுர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், நாகை (பள்ளிகள்), திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புதுச்சேரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த விடுமுறை மாவட்ட விவரங்கள் அப்டேட் செய்யப்படும்.